பக்கம்:மயில்விழி மான்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

மயில்விழி மான்

"ஒரு சங்கமல்ல; வீதிக்கு வீதி சங்கங்கள் இருக்கின்றன!"

"அப்படியா? செந்தமிழ் நாட்டில் இப்போது தமிழர்கள் வசிக்கிறார்களா?"

"சுமார் இரண்டரைக் கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழ்க் கவிஞர்களும் இரண்டொருவர் இருக்கிறார்கள்!"

"அப்படியென்றால், இப்போது அங்கே ராட்சதர்களின் பயமே இல்லையா?"

"ராட்சதர்களா? எந்த ராட்சதர்கள்?"

"இலங்கையை ஆண்ட இராவணன் குலத்து ராட்சதர்கள்!"

"இலங்கையிலே இப்போது ராட்சதர்கள் இல்லையே!"

"பின்னே யார் இருக்கிறார்கள்?"

"இலங்கையிலே இப்போது சிங்களவர் என்ற சாதியார் ஆட்சி செய்கிறார்கள். தமிழர்கள் பலரும் அங்கே வசிக்கிறார்கள்."

"அந்தச் சிங்களவர்கள் நம் தமிழர்களைப் பிடித்துச் சாப்பிடுவதில்லையா?"

"இன்னும் அவ்வளவுக்கு வரவில்லை! தமிழர்களைத் தமிழ்நாட்டுக்குப் போகும்படி விரட்டியடிக்கத்