பக்கம்:மயில்விழி மான்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயில்விழி மான்

31

மயில்விழி மான் என்னை விழித்துப் பார்த்துச் சிரித்துவிட்டு அவளுடைய தந்தைக்கு என்னைச் சுருக்கமாக அறிமுகம் செய்து வைத்தாள். பிறகு துள்ளிக் குதித்து ஓடினாள். அப்போது அவள் பெயரின் பொருத்தம் நன்கு வெளியாயிற்று.

"மானின் விழிபெற்று மயில் வந்ததென வந்தாள்" என்ற கம்பன் பாடலுக்கு மாறாக இருந்தாலும், மயிலின் பார்வையிலும் ஒரு தனி அழகு இருக்கத்தான் இருக்கிறது. மானின் துள்ளலில் உள்ள கவர்ச்சியைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை யல்லவா?

5

ளஞ்சென்னி நெடுஞ்செழியன் பெருஞ் சேரலாதர் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒருவாறு பதில் சொல்லிச் சமாளித்த பிறகு அவர்களுடைய வரலாற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அந்த வரலாறு இதுதான்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் குமரி முனையிலிருந்து விந்திய பர்வதம் வரையில் பரவிச் சீரும் சிறப்பும் பெற்று மேன்மையுற்று விளங்கி வந்தது. சேர சோழ பாண்டியர்கள் நட்புரிமை கொண்டு அவர்களுடைய ராஜ்யங்களை நீதி தவறாமல் ஆண்டு வந்தார்கள். குடிமக்கள் எல்லாத் துறைகளிலும் செழிப்படைந்து ஓங்கியிருந்தார்கள். இது போலவே தமிழிலக்கியமும் மேன்மையடைந்து வளர்ச்சியுற்று