பக்கம்:மயில்விழி மான்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

மயில்விழி மான்

கேட்டதே இல்லை. தமிழகத்தில் கடல் கொண்டு போய்விட்ட நூல்களில் அப்பாடல்கள் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

அகஸ்தியருக்குப் பின்னால் வந்த புலவர்கல் சிலர் தமிழ் மொழியைக் கரடு முரடாக்க முயன்றதைப் பற்றியும் அவர்களுக்கு எடுத்துக் கூறினேன்.

"கால்பார் கோத்து ஞாலத்தியக்கும்
காவற்சாகா டுகைப்போன் மாணின்
ஊறின்றாகி யாறினிது படுமே
உய்த்தறேற் றானாயின் வைகலும்
பகைக் கூழள்ளற் பட்டு
மிகப்பத றிநோய்த் தலைத்தலைத்தருமே."

இது போன்ற பாடல்கள் சிலவற்றை நான் சொல்லக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

யில்விழி மானுக்கும் எனக்கும் முதல் சந்திப்பிலேயே ஏற்பட்ட நட்பு நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. ஒருவரையொருவர் பிரிந்து ஒரு நிமிடமும் உயிர் வாழ முடியாது என்ற நிலைமை ஏற்பட்டது. அமுதத் தீவில் குழந்தைகள் பிறந்து சில நாளைக்குள்ளேயே இன்னாருக்கு இன்னார் என்று முடிவு செய்து விடுவது வழக்கமாம். மயில்விழி மானினாளுக்கு அவ்விதம் முடிவு செய்யப்பட்டிருந்த யுவனைச் சிறு பிராயத்திலேயே ராட்சதத் தீவினர் கொண்டு போய் விட்டார்கள். ஆகையால், மயில்விழி மானின் திருமணத்தைப் பற்றி அவள் பெற்றோர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நான் ஒருவன் போய்ச் சேர்ந்தது அவர்-