பக்கம்:மயில்விழி மான்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

மயில்விழி மான்

அப்போதுதான் என் மந்த மதிக்கு உண்மை புலனாயிற்று. 'ஹைட்ரஜன் குண்டு' பரிசோதனை நடத்தினார்கள் என்பதை அறிந்தேன். மனிதர்களே இல்லாத பிரதேசங்கள் என்று நினைத்து அங்கே ஹைட்ரஜன் குண்டைப் போட்டார்கள்.

சற்று நேரத்துக்கெல்லாம் புகை கலைந்தது நெஞ்சு பதைபதைக்க, வயிறு கலக்கம் அடைய அமுதத்தீவு இருந்த திசையை நோக்கினேன். அங்கே அமுதத்தீவையும் காணவில்லை; அருகிலிருந்த அசுரத்தீவையும் காணவில்லை! எல்லாம் ஹைட்ரஜன் குண்டில் பஸ்மீகரமாகிக் கடலில் கலந்து மறைந்து விட்டன.

கத்து கத்து என்று கத்தினேன். அழு அழு என்று அழுதேன். கப்பல் அதிகாரிகளிடம் முறையிட்டேன். யாரும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. நான் குறிப்பிட்ட இடங்களில் இருந்த தீவுகளில் ஜனங்களே இல்லையென்று அவர்கள் சாதித்து விட்டார்கள்.

சில நாளைக்கெல்லாம் வேறு கப்பலில் ஏற்றி என்னை இந்தியாவுக்கு அனுப்பினார்கள். இங்கே வந்த பிறகு சர்க்கார் இலாகாக்களைப் போய்ப் பார்த்தேன். ஒருவரும் என் பேச்சை நம்பவும் இல்லை. எனக்குத் தைரியம் கொடுக்கவும் இல்லை. 'சித்தப் பிரமை சரித்திர ஆராய்ச்சியாகாது' என்று சொல்லி விட்டார்கள்.

அவ்வளவுதான் என் வரலாறு. தூய பழந்தமிழர் நாகரிகத்தின் உறைவிடமாகப் பஸிபிக் சமுத்-