பக்கம்:மயில்விழி மான்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடகக்காரி

69

ஆனால் என்ன செய்வது? கிடைக்கிற நடிகர்களைக் கொண்டுதானே நடத்த வேண்டியிருக்கிறது? ஆனால் ஜனங்களுக்கு என்னமோ பிடித்திருக்கிறது!" என்றான் நமச்சிவாயம்.

"அது தான், தம்பி, வேண்டியது! மற்றது எப்படி இருந்தால் என்ன?" என்றேன் நான்.

நமச்சிவாயம் போன பிறகு நீலமணி, "இது என்ன மாமா? இப்படி என்னைச் சந்தியில் இழுத்து விட்டீர்கள்? அவர் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வார் 'அதிகப் பிரசங்கி, அடங்காப் பிடாரி' என்றெல்லாம் எண்ணிக் கொண்டு போகமாட்டாரா?" என்று கேட்டாள்.

"எண்ணிக் கொண்டு போவது என்ன? உண்மையும் அப்படித்தானே? நீ அதிகப் பிரசங்கி - அடங்காப் பிடாரிதானே? அதில் என்ன சந்தேகம்?" என்றேன் நான்.

ழக்கமாக நீலமணியிடம் பேசுகிறபடி வேடிக்கையாகத்தான் சொன்னேன். ஆனால் அவள் வழக்கம் போல் சிரித்துவிட்டுப் போகாமல், குப்புறப்படுத்துக் கொண்டு விம்மி விம்மி அழத் தொடங்கி விட்டாள். "இது என்னடா வம்பு?" என்று எனக்கு வேதனையாகப் போய்விட்டது. அவளை ஒருவாறு சமாதானப் படுத்தினேன். அன்றிரவு நாங்கள் யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டு விட்டபடியால், அந்தச் சம்பவம் அதோடு போய்விட்டது