பக்கம்:மயில்விழி மான்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

மயில்விழி மான்

காக இந்திய சர்க்கார் என்னையும் என் சகாக்களையும் அனுப்பி வைத்தார்கள்.

உலகெங்கும் ஆராய்ச்சி அறிவைப் பரப்புவதற்காக அமெரிக்கக் கோடீசுவரரான ராக்பெல்லர் பிரபு ஒரு பெரிய நிதியை ஏற்படுத்தியிருக்கிறார். அந்த நிதியிலிருந்து எங்கள் ஒவ்வொருவருடைய பிரயாணச் செலவுக்காகவும் இருபத்தையாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். அதற்குச் சமமான தொகை இந்திய சர்க்காரும் கொடுத்தார்கள்.

அடுத்த ஐந்து வருஷத் திட்டத்தில் இந்தியாவில் மொத்தம் இருபது கோடி வாத்துக்கள் வளர்த்து இரு நூறு லட்சம் படி வாத்துப் பால் உற்பத்தி செய்தே தீருவது என்று ஸ்ரீ குல்ஜாரிலால் நந்தா தீர்மானித்திருக்கிறார் அல்லவா? இதை நீங்கள் மனத்தில் வைத்துக் கொண்டால், எங்களது ஆராய்ச்சிப் பிரயாணம் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

துரதிர்ஷ்டவசமாக நாங்கள் அமெரிக்கா சென்ற சமயம் எங்கள் ஆராய்ச்சிக்கு உகந்த சமயமாக இல்லை. சென்ற சில வருஷங்களாக அமெரிக்க மார்க்கெட்டிலும் உலகமார்க்கெட்டிலும் வாத்துப்பால் 'ஸப்ளை' மிக அதிகமாகி விலை குறைந்து வந்ததாம். இதைச் சமாளிப்பதற்காக அமெரிக்கா வாத்துப் பண்ணை முதலாளிகள் இரண்டு வருஷங்களுக்கு வாத்துப் பால் உற்பத்தியை அடியோடு நிறுத்திவிடத் தீர்மானித்து விட்டார்கள். வாத்துகளையெல்லாம் பனிக்கட்டியில் வைத்துப் பதனிட்டுப் போர்மோஸாத் தீவில் உள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மயில்விழி_மான்.pdf/9&oldid=1546521" இலிருந்து மீள்விக்கப்பட்டது