இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
நிறுவனமயமாகிச் சாத்திர வரன்முறைகளுக்குள் ஒடுங்கிக் கெட்டிதட்டிப்போன 'மரபு'களுக்கு மாறாக, நெகிழ்ந்து நிலைக்கும் மக்கள் பண்பாட்டு மரபின் உயிர்ப்பை அகழ்ந்து கூட்டுவனவே தொ.ப.வின் ஆய்வுகள். அவ்வாறு கெட்டிதட்டிப் போனவற்றின், போக வாய்ப்புள்ளவற்றின் ஆதிக்க அரசியல் உள்நோக்கத்தை இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் தோலுரித்துக் காட்டுகின்றன. பண்பாட்டு மரபைப் பேணும் அதேவேளையில் நலங்குன்றாப் புதுமைகளுக்கு இசைவான தகவமைப்பையும் இக்கட்டுரைகள் வலியுறுத்துகின்றன. பா.மதிவாணன் ரூ. 100 காலச்சுவடு பதிப்பகம் ISBN 978-93-88631-23-5 00002 9789388 631235 கட்டுரைகள் அட்டை வடிவமைப்பு சிவராஜ் பாரதி