பக்கம்:மருதநில மங்கை.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16


பெயரனை யாம் கொள்வேம்

ளம் மிக்க குடியில் வாழ்க்கைப்பட்டாள் ஒருத்தி. கணவனும் மனைவியும் கருத்தொருமித்து வாழ்ந்தனர். விருந்தோம்பல் முதலாம் இல்லறக் கடமையில் கருத்துடையவளாய் வாழ்ந்தாள் அவள். அவள் மேற்கொண்ட இல்வாழ்க்கைக்கு உற்ற துணையாய் உறுபொருள் ஈட்டி அளித்தும், அவள்பால் குறைவறியாப் பேரன்பு கொண்டும் வாழ்ந்திருந்தான் அவன். அவர் மனையறத்தை மாட்சிமைப் படுத்தும் நன்கலமாய் வந்து பிறந்தான் ஒரு மகன். தன் மனையறக் கடன்களுக்கிடையே, மகனைப் பேணி வளர்க்கும் பெரிய பொறுப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டாள். மகன் நடைதேர் பயிலும் பருவம் பெற்றான். அவன் வளர வளர, அவனைப் பேணும் பொறுப்பு பெருகிற்று. அதனால் கணவனோடு கலந்து மகிழ்தல் குறைந்தது. கணவன் பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டான். நாட்கள் செல்லச் செல்ல, அவன் அவ்வொழுக்கத்தில் ஆழ்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/100&oldid=1129663" இலிருந்து மீள்விக்கப்பட்டது