பக்கம்:மருதநில மங்கை.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை99


போனான். மகன் வளர்ப்பிலும், மனையறக் கடமையிலும் கருத்துடையவளாய் வாழ்ந்தமையால் கணவனைப் பேணும் கடமையில் சிறிதே தளர்ந்தாளாயினும், அவன் பரத்தைமை ஒழுக்கம், அவளைப் பெருந்துயர்க்கு உள்ளாக்கிற்று. அவள் பெரிதும் கலங்கினாள்.

ஒரு நாள், கணவன் மேற்கொண்ட ஒழுக்கக் கேட்டை எண்ணிக் கண்ணீர் விட்டுக் கலங்கியிருந்தவள், தான் இருந்த இடம் நோக்கித், தன் மகன் நடைதேர் உருட்டி வருவதைக் கண்டாள். அவள் கலக்கம் அகன்றது. மகனைக் கண்ட மகிழ்ச்சி, கணவனைப் பற்றிய கலக்கத்தை மறக்கப் பண்ணிற்று.

மணி போன்ற அவன் வாய். அவ்வாயினின்றும் வெளிப்படும் பொருளோடு பொருந்தா மழலை. மழலை வழங்கும் வாயினின்றும் வழிந்தோடும் உமிழ்நீர். அவ்வெச்சிலால் நனைந்த மார்பணி. மணம் நாறும் தலை மயிர். அம்மயிரில் முடிக்கப் பெற்ற பிறை அணி. அப்பிறையினின்றும் தொங்கும் முத்துவடம். அவ்வடத்தின் ஈற்றில் கிடந்து நெற்றியில் வந்து தவழும் சுட்டி. உள் உருவைப் புறங்காட்டும் மெல்லிய உயர்ந்த ஆடை, பரல் ஒலிக்கும் சதங்கை. சதங்கை அணிந்த கால்களை ஆடை தடுக்கவும் நில்லாது, தாயிடத்தே பால் உண்ணும் நினைவும் அற்று, நடைதேர் உருட்டி நடைபயிலும் அவன் முயற்சி ஆகிய இவற்றைக் கண்டு மகிழ்ந்தாள்.

ஆடும். மகனை ஓடிப் பற்றினாள். தன் முன் நிறுத்தினாள். “மகனே! நம் வீடு நோக்கி வரும் விருந்தினரை ஓம்பும் வேலை மிகுதியால், உன்னை எடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/101&oldid=1129664" இலிருந்து மீள்விக்கப்பட்டது