பக்கம்:மருதநில மங்கை.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை113


ஆக்கியவள் அக் கொடியாள். அவள் அத்தகையள் என அறியாது ஆங்குச் சென்ற உன்னை அலைப்பேன், அறக்கொடியவனே!” என்று கூறிக் கோலை ஓச்சினாள்.

தாயின் கடிய கோபத்தையும், அவள் கைக் கோலையும் கண்டு, அஞ்சி நடுநடுங்கிப் போனான் அம்மகன். கண்கள் நீர் மல்க, வாய் திறந்து அழத் தொடங்கினான். மகன் அஞ்சிய நிலைகண்டாள் தாய். கணவன் மீது கொண்ட கோபத்தால், இவனைக் கடிந்து கொண்டேனே என எண்ணி வருந்தினாள். உடனே மகனை வாரி எடுத்தாள். கண்ணீரைத் துடைத்தாள். களிப்பூட்டினாள். அழுகை ஓய்ந்தான் அவனும். அவனை அழைத்துச் சென்று அவனோடு ஒருபால் அமர்ந்தாள். அவனை நோக்கி, “மகனே! நடந்ததை மறந்துவிடு. அதுபோலும் இடங்களுக்கு இனிச் செல்லாதே. உன் தந்தையை இழந்து, நம்போல் வருந்தி வாடுவார் வீட்டிற்கு வேண்டுமானால் செல். இனி, உன்னை நானும் வீட்டை விட்டு வெளியே அனுப்பேன். நீயும் போதல் கூடாது!” என்று அறிவுரை கூறி அணைத்துக் கொண்டாள்.

“ஞாலம் வறம்தீரப் பெய்யக் குணக்குஏர்பு
காலத்தில் தோன்றிய கொண்மூப்போல் எம்முலை
பாலொடு, வீங்கத் தவநெடிது ஆயினை;
புத்தேளிர் கோட்டம் வலம்செய்து இவனொடு
புக்கவழி எல்லாம் கூறு 5

கூறுவேன்; மேயாயே போலவினவி வழிமுறைக்
காயாமை வேண்டுவல்யான்.
காயேம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/113&oldid=1129766" இலிருந்து மீள்விக்கப்பட்டது