பக்கம்:மருதநில மங்கை.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112புலவர் கா. கோவிந்தன்


மடக்குறு மாக்களோடு ஒரை அயரும்
அடக்கம்இல் போழ்தின்கண் தந்தை காமுற்ற 10
தொடக்கத்துத் தாய்உழைப் புக்காற்கு, அவளும்
மருப்புப்பூண் கையுறை யாக அணிந்து
‘பெருமான்! கமுகம் காட்டு!’ என்பாள், கண்ணீர் சொரிமுத்தம் காழ்சோர்வ போன்றன; மற்றும்,

வழிமுறைத் தாய்உழைப் புக்காற்கு அவளும், 15
மயங்கு நோய் தாங்கி, மகன்எதிர் வந்து
முயங்கினள்; முத்தினள் நோக்கி நினைந்தே
“நினக்கு யாம் யாரேம் ஆகுதும்?” என்று

வனப்புறக் கொள்வன நாடி அணிந்தனள்;
ஆங்கே, “அரிமதர் உண்கண் பசப்ப நோய் செய்யும் 20
பெருமான் பரத்தைமை ஒவ்வாதி!” என்றாள்,
அவட்கு இனிதாகி விடுத்தனன், போகித்
தலைக்கொண்டு நம்மொடு காயும் மற்றிதோர்
புலத்தகைப் புத்தேள்இல் புக்கான், அலைக்குஒரு

கோல்தா, நினக்கு அவள் யாராகும்? எல்லா! 25
வருந்தியான் நோய்கூர, நுந்தையை என்றும்
பருந்து எறிந்தற்றாகக் கொள்ளும்; கொண்டாங்கே,
தொடியும் உகிரும் படையாக, நுந்தை
கடியுடை மார்பில் சிறுகண்ணும் உட்காள்

வடுவும் குறித்தாங்கே செய்யும், விடு இனி? 30
அன்ன பிறவும்; பெருமான்! அவள்வயின்
துன்னுதல் ஒம்பித் திறவதின் முன்னிநீ
ஐயம் இல்லாதவர் இல்ஒழிய, எம்போலக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/114&oldid=1129769" இலிருந்து மீள்விக்கப்பட்டது