பக்கம்:மருதநில மங்கை.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை119


அம்தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி,
முந்தை இருந்து மகன்செய்த நோய்த்தலை,
வெந்த புண் வேல் எறிந்தற்றால், வடுவொடு 30
தந்தையும் வந்து நிலை.

விளையாடப் போன மகன், மீண்டு வருங்கால், அவன் தந்தை காதலியின் மனைபுகுந்து வந்தான் என்பதறிந்து, தலைவி அவனைக் கண்டிக்கும்போது, தலைவனும் வரக்கண்டு, அவள் வருந்திக் கூறியது இது.

1. வீங்கு–பெரிய; 2. நோன்கதவு–வலியகதவு; உலமரவருந்த; 5. உளைவிலை–கவலையின்றி; ஊட்டல் – ஊட்டப்பெறாமல்; தோடு – இலை; குரும்பை–பனங்காய்; 9. குடவாய்–குடம் போன்ற வாயுடைய (காய்); வாங்கி–இழுத்து; 10, நாப்பண்–நடுவே; 11. புரிநெகிழ்பு–மலர்ந்து ; 12. நீல நிரைப்போது–வரிசையாக நிற்கும் நீல மலர்கள்; உறுகாற்று–வீசும் காற்றிற்கு; உலைவன போல்–அசைவனபோல்; 13. சாலகம்சாளரம்; ஒல்கிய–தளர்ந்த; சாளரத்திற்கு அப்பால் நிற்கும் மகளிரின் சுழலும் கண்கள், காற்றால் அசையும் நீலப்போதுகளின் வரிசை போல் தோன்றும். 15. கால்கோள் தொடக்கம்; 16. நூபுரம் சிலம்பு; இயலி நடந்து; 21. உள்ளா – நிலையாத; மறந்துபோன; 23. வேற்று ஆனாத்தாயர்–வேற்றுத்தாய், ஆனால் அன்பு குறையாத தாய்; 25. கதியாதி–சினவாதே; 26. எள்ளலான்–இகழ்தலால்; அம்–அழகிய தீம்–இனிய; கலம்–அணிகலன்கள் அழுத்திச் செய்த வடு; 29. நோய்த்தலை–நோய்க்கு மேலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/121&oldid=1129867" இலிருந்து மீள்விக்கப்பட்டது