பக்கம்:மருதநில மங்கை.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை125


“உறுவளி தூக்கும் உயர்சினை மாவின்
நறுவடி ஆர்இற் றவைபோல் அழியக்
கரந்துயான் அரக்கவும், கைநில்லா விங்கிச்,
சுரந்தஎன் மென்முலைப்பால்பழு தாக, நீ

நல்வாயில் போத்தந்த பொழுதினான், எல்லா! 5
கடவுட் கடிநகர் தோறும் இவனை
வலங்கொளீஇ வாஎனச் சென்றாய், விலங்கினை;
ஈரம்இலாத இவன் தந்தை பெண்டிருள்
யார்இல் தவிர்ந்தனை? கூறு.

நீருள், அடைமறை ஆய்இதழ்ப் போதுபோல் கொண்ட 10
குடைநிழல் தோன்றும் நின் செம்மலைக் காணூஉ,
‘இவன் மன்ற, யான்நோவ உள்ளம் கொண்டு, உள்ளா
மகன்அல்லான் பெற்ற மகன்’ என்று அகன் நகர்
வாயில் வரை இறந்து போத்தந்து, தாயர்

தெருவில் தவிர்ப்பத், தவிர்ந்தனன், மற்று அவர் 15
தத்தம் கலங்களுள் கையுறை என்று இவற்கு
ஒத்தவை ஆராய்ந்து அணிந்தார்; பிறன்பெண்டிர்
ஈத்தவை கொள்வானாம் இஃது ஒத்தன்’ சீத்தை!
செறுத்தக்கான் மன்ற பெரிது.

சிறுபட்டி! ஏதிலார் கை எம்மை எள்ளுபுநீ தொட்ட 20
மோதிரம் யாவோ? யாம் கான்கு.
அவற்றுள், நறாவிதழ் கண்டன்ன செவ்விரற்கு ஏற்பச்
சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள்;
செறியாப் பரத்தை இவள் தந்தை மார்பில்
பொறி ஒற்றிக்கொண்டு ஆள்வல் என்பது தன்னை 25
அறிஇயச் செய்த வினை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/127&oldid=1129808" இலிருந்து மீள்விக்கப்பட்டது