பக்கம்:மருதநில மங்கை.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126புலவர் கா. கோவிந்தன்


அன்னையோ! இஃது ஒன்று,
முந்தைய கண்டும் எழுகல்லாது என்முன்னர்

வெந்த புண்வேல் எறிந்தற்றா; இஃது ஒன்று!
தந்தை இறைத்தொடி மற்று இவன் தன்கைக்கண் 30
தந்தார் யார் எல்லாஅ! இது?
இஃது ஒன்று; எனஒத்துக் காண்க பிறரும் இவற்கு என்னும்
தன்னலம் பாடுவி தந்தாளா? நின்னை
இது தொடுகு என்றவர் யார்?

அஞ்சாதி; நீயும் தவறிலை; நின்கை இதுதந்த 35
பூ எழில் உண்க ண் அவளும் தவறிலள்;
வேனில் புனல் அன்ன நுந்தையை நோவார் யார்?
மேல்நின்றும் எள்ளி, இது இவன் கைத்தந்தாள்

தான் யாரோ என்று வினவிய, நோய்ப்பாலேன்
யானே தவறுடையேன்,” 40

கோயில் வலம் செய்து வரச் சேடியொடு சென்ற மகன், வழியில் பரத்தையர் சூட்டிய அணியோடு வரக்கண்ட தலைவி, தனக்குள்ளே நொந்து கூறியது இது.

1. உறுவளி பெருங்காற்று; தூக்கும்–அசைக்கும்; 2. வடி–பிஞ்சு: ஆர் இற்று–காம்பற்று; 3. அரக்கவும்–அழுத்தித் தேய்க்கவும்; 5. போத்தந்த–போன; 6. கடவுள் கடிநகர்–கோயில்; 7. விலங்கினை–தவறிவிட்டோம்; 8. ஈரம்–அன்பு; 9. தவிர்ந்தனை–தங்கினாய்; 10. அடைமறை– இலையால் மறைந்த; 14. வாயில் வரை இறந்து– வாயிலைக்கடந்து; 18. இஃது ஒத்தன்–இவன் ஒருவன்; 18. சீத்தை–கைவிடத் தக்கவன்; 19. செறுத்தக்கான்–கோபிக்கத் தக்கவன்: 20. எள்ளுபு–இகழ; 23. சுறாஏறு–சுறாமீன்; 31. இறைத்தொடி– முன்கைத்தொடி; 34. தன்னலம் பாடுவி– தன்புகழ் பாடுவாள்; 40. நோய்ப்பாலேன்–துன்பத்திற்குள்ளான நான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/128&oldid=1129868" இலிருந்து மீள்விக்கப்பட்டது