பக்கம்:மருதநில மங்கை.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132புலவர் கா. கோவிந்தன்


உண்ணாது, பரத்தைவீடு சென்ற பழியோடு வந்து நிற்கும் அவன்பால் பரிவு காட்டுகின்றனனே என்ற எண்ணத்தால் சினம் மிகவே மகனைக் கடிந்தாள். ஆனால், அம்மகனோ, தாய் கடிவது கண்டு கலங்காது, ஆடியும், பாடியும் அவள் கோபத்தைத் தனித்து மகிழ்ச்சி ஊட்டினான். ஆடல் பாடல்களால் தன்னை மெய்ம்மறக்கச் செய்யும் மகன் செயல் கண்டு மகிழ்ந்த அவள், “மகனே! உன் செயலால், உன்மீது பேரன்பு கொண்டு உன்னைப் பாராட்டும், என் பாராட்டுப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே, உன்னை ஈன்ற யான், உனக்கு உவந்தளிக்கும் இப்பாலை உண்ணுவாயாக. இப்பாலை உனக்கு ஊட்டினாலல்லது என் உள்ளம் அமைதி கொள்ளாது. உனக்கு ஊட்டாது யானும் விடேன்!” என்று கூறி, மகனுக்குப் பாலுட்டும் பணியினை மேற்கொண்டு, வாயிற்கண் நிற்கும் கணவனை வரவேற்கும் கருத்திழந்து கிடந்தாள்.

“காலவை, சுடுபொன் வளைஇய ஈரமை சுற்றொடு
பொடியழல் புறம்தந்த செய்வுறு கிண்கிணி;
உடுத்தவை, கைவினைப் பொலிந்த காசமை பொலங் காழ்மேல்
மையில் செந்துகிர்க் கோவை, அவற்றின்மேல்

தைஇய பூந்துகில் ஐதுகழல் ஒருதிரை; 5
கையதை, அலவன் கண்பெற அடங்கச் சுற்றிய
பலவுறு கண்ணுள் சிலகோல் அவிர்தொடி;
பூண்டவை, எறியா வாளும் எற்றா மழுவும்
செறியக் கட்டி ஈரிடைத் தாழ்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/134&oldid=1129823" இலிருந்து மீள்விக்கப்பட்டது