பக்கம்:மருதநில மங்கை.pdf/153

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை151


ஆகவே, என் வாழாமைக்கு என் சினமே காரணம் ஆம் போலும் !” என்று இவ்வாறு சென்றது அவள் சிந்தனை. அதனால், அவனைச் சினப்பதை மறந்தாள். மறந்தவள், அவனை நோக்கி, “ஏடா! நீ கூறும் பொய்ச் சூளால் கேடு வருமாயின், அக்கேடு யாரை வருத்தும்?” எனக் கேட்டு ஊடலைக் கைவிட்டாள்.

“ஒரூஉக் கொடியஇயல் நல்லார் குரல்நாற்றத்து உற்ற
முடிஉதிர் பூந்தாது மொய்ம்பின வாகத்,
தொடிய, எமக்கு நீயாரை? பெரியார்க்கு
அடியரோ, ஆற்றாதவர்?

கடியர்தமக்கு, யார்சொல்லத் தக்கார்மற்று? 5
வினைக்கெட்டு, வாயல்லா வெண்மை உரையாது கூறுநின்
மாயம் மருள்வார் அகத்து.

ஆயிழாய்! நின்கண் பெறினல்லால், இன்னுயிர் வாழ்கல்லா
என்கண் என்னோ தவறு?

இஃதுஒத்தன் புள்ளிக்களவன் புனல்சேர்பு ஒதுக்கம்போல்,
வள்உகிர் போழ்ந்தனவும், வாள்எயிறு உற்றனவும்,
ஒள்இதழ் சோர்ந்த நின்கண்ணியும், நல்லார்
சிரறுபு சீறச் சிவந்த நின்மார்பும்
தவறாதல் சாலாவோ? கூறு.

அதுதக்கது, வேற்றுமை என்கண்ணோ ஒராதி; தீதின்மை 15
தேற்றங் கண்டியாய்; தெளிக்கு.

இனித் தேற்றேம் யாம்;
தேர்மயங்கி வந்த தெரிகோதை அந்நல்லார்
தார்மயங்கி வந்ததவறு அஞ்சிப், போர் மயங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/153&oldid=1130025" இலிருந்து மீள்விக்கப்பட்டது