பக்கம்:மருதநில மங்கை.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
24


அடி சேர்தல் உண்டு

ராவிற்கு இருகோடு தோன்றினாற் போல், உயிரும் உள்ளமும் ஒன்றாய், உடல் இரண்டாய் ஒன்றி வாழும் இளங் காதலர் இருவர் ஓர் ஊரில் வாழ்ந்திருந்தனர். இடையீடு எதுவும் பெறாமல், அவர்கள் வாழ்க்கை சில காலம் இனிது நடைபெற்று வந்தது. ஆண்டு சில கழிந்தன. இளைஞன் உள்ளத்தில், பரத்தையராசை எவ்வாறோ குடிகொண்டு விட்டது. ஊரில் அழகு மிக்க ஒரு பரத்தை பால் அன்பு கொண்டான் அவன். அவள் மனை புகுந்து, சிலநாள் அங்கு வாழ்ந்து மகிழ்ந்தான். மனம் தெளிந்தான். மீண்டு தன் மனைக்கு வந்தான். வந்து அவன் வருகையை எதிர்நோக்கி, அவன் ஒழுக்கக் கேட்டை எண்ணிக் கண்ணீர் விட்டுக் கலங்கி நிற்கும் மனைவியின் அருகிற் சென்று, அவள் கூந்தலை மெல்லத் தடவிக்கொடுத்தான்.

தன்னை மறந்து, தன்போலும் ஒரு பெண்ணின்பால் ஆசைகொண்டு, அவள் பின் திரிந்த அவன் செயல் கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/155&oldid=1130027" இலிருந்து மீள்விக்கப்பட்டது