பக்கம்:மருதநில மங்கை.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
25


நிறையாற்றா நெஞ்சு

ளைஞன் ஒருவன் பரத்தை யொருத்திபால் ஆசை கொண்டான். ஒரு சில நாட்கள், அவன் அப் பரத்தை மனைக்குச் சென்று மகிழ்ந்து வரவும் தலைப்பட்டான். அவன் களவுக் காதலை அவன் மனைவி அறியாள். அதில் அவன் பெரிதும் விழிப்பாயிருந்தான். ஆனால், அது தவறி விட்டது. அவன் பரத்தை யுறவை அவள் அறிந்து கொண்டாள்.

ஒருநாள் இரவு நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. நள்ளிருட்டுப் பொழுது. நடு யாமம். இளைஞன், மனைவியோடு, தன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தான். திடுமெனத் தெருக் கதவைத் தட்டும் ஒலி கேட்டு இருவரும் விழித்துக் கொண்டனர். கதவைத் திறக்க, இளைஞன் விரைந்து சென்றான். கதவைப் புடைத்ததால் எழுந்த ஒலியைத் தொடர்ந்து, காற்சிலம்பு ஒலிக்கும் ஒலியும் கேட்கவே, அவன் மனைவி, அவனைப் பின் தொடர்ந்து, மெல்லச் சென்று, திறந்த கதவு வழியே தெருவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/160&oldid=1130034" இலிருந்து மீள்விக்கப்பட்டது