பக்கம்:மருதநில மங்கை.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160புலவர் கா. கோவிந்தன்


காரணமாம். என்னை ஏற்றுக் கொள்!” என்று கூறி இறைஞ்சினான்.

அக் காட்சியைக் கண்டாள் இளைஞன் மனைவி. அதற்கு மேல் காண அவள் விரும்பவில்லை. காண நாணிற்று அவள் கற்பு. விம்மலை அடக்கி விரைந்து சென்று படுக்கையில் வீழ்ந்தாள். நாழிகை சில கழிந்து, இளைஞன் ஏதும் நிகழாதது போல் வந்து, மனைவியின் அருகில் படுத்து உறங்கிவிட்டான்.

பொழுது புலர்ந்தது. மனைவி முகத்தில் மகிழ்ச்சியில்லை. அது வாடி வனப்பிழந்து கிடந்தது. கண்கள் சிவந்தும், நீர் நிறைந்தும் தோன்றின. அவள் நிலை, இளைஞனைப் பெரிதும் துன்புறுத்திற்று. அவள் அருகிற் சென்றான். அவள் மேனியை மெல்லத் தடவிக் கொடுத்தான். அவள் மனம் மகிழுமாறு, அவளைப் பாராட்டினான். “பெண்ணே ! உன்டால் இன்று காணலாம் இம் மாற்றத்திற்குக் காரணம் என்ன?” என அன்போடு கேட்டான். அவன் கேள்வி, அவள் சினத்தை அதிகப்படுத்திற்று, ! “ஏடா இதுகாறும், உன்னை ஒழுக்க நெறி நிற்கும் உரவோன் என எண்ணி ஏமாந்தேன். நீ வஞ்சகன் என்பதை இன்று அறிந்தேன். உன் களவுக்காதல் எனக்குத் தெரிந்துவிட்டது. உன் நகை பொய்நகை என்பதை அறிந்து கொண்டேன். இனி என் முன் பல்லைக் காட்டாதே. நீ கறுவது எதையும் நான் கேளேன். என்னைத் தொடுவதும் செய்யாதே. தழுவி மகிழ உனக்குப் பெண்டிர் பலர் உளர். ஆண்டுச் சென்று அவர்களைத் தழுவு” எனக் கூறி, அவனை விரட்டினாள்.

தான் பரத்தையர் தொடர்பு கொண்டதையோ, அப் பரத்தை வந்து சென்றதையோ மனைவி அறியாள் என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/162&oldid=1130037" இலிருந்து மீள்விக்கப்பட்டது