பக்கம்:மருதநில மங்கை.pdf/184

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
28


கடவுளைக் கண்டாயோ?

காலையில் சென்ற கணவன், இரவில் நாழிகை பல கழித்து வந்து சேர்ந்தான். வந்தானை மனைவி உற்று நோக்கினாள். அவன் மார்பில் பூசிய சந்தனம் புலராமலே இருந்தது. அதைப் பார்த்து விட்டாள் அவள். இந்நேரத்தில், இவனுக்குச் சந்தனம் பூசி அனுப்பியவர் யார் என எண்ணினாள். அவ்வெண்ணத்தைத் தொடர்ந்து, அவன் சில நாட்களாகவே, தன்னோடு பண்டுபோல் பழகாது, இவ்வாறு இரவில் நாழிகை கழித்துப் புதிய பொலிவோடு வருவது நினைவிற்கு வரவே, அவன் யாரோ ஒரு பரத்தை பால் தொடர்பு கொண்டுளான் எனத் துணிந்தாள். அதனால், பண்டு தழுவத்தழுவ வற்றாப் பேரின்பம் தந்த அவன் மார்பு, இப்போது பரத்தைமை யுற்றுப் பாழ்பட்டதாக எண்ணி வெறுத்தாள். அவ்வெறுப்பு மிகுதியால், “ஏடா! சந்தனம் பூசிய வடு விளங்க வந்து நிற்கின்றாய், இரவில் நாழிகை பல கழித்து வரும் வழக்கம் மேற்கொண்டுள்ளாய். பண்டெல்லாம், நீ இவ்வாறு நெறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/184&oldid=1130148" இலிருந்து மீள்விக்கப்பட்டது