பக்கம்:மருதநில மங்கை.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை187


தொடங்கி, “அன்ப! நீ கண்ட கடவுளர் பலருள் உன்னை வானப்பிரத்த வாழ்வில் விருப்பம் கொள்ளுமாறு உன் மனத்தை மாற்றிய கடவுளர் யாவர்? அக்கடவுளர்பால் நீ செல்லாதொழிவையேல், பிற சமயவாதிகள் விடுக்கும் நல்ல கடாக்களுக்கு அளிக்க வல்ல நல்ல விடைகளையும், நீர் பலகால் மூழ்குதலால், ஈரம் நிறைந்து நீண்ட கரிய சடாமுடியினையும் உடைய அக்கடவுளர் எல்லோர்க்கும், நல்லோன் ஒருவனை வானப்பிரத்த வாழ்வில் வாழ வைக்குமாறு அறமுறைக்கும் வாய்ப்பற்றுப் போக ஒரு குறைபாடுண்டாம். ஆகவே, அன்ப! அவர்க்கு அக்குறைபாடு நேராவாறு, அவண் விரைந்து செல்க!” எனக்கூறித் துரத்தினாள்.

"வண்டூது சாந்தம் வடுக்கொள நீவிய
தண்டாத் தீம்சாயல், பரத்தை வியன் மார்ப!
பண்டு இன்னை பல்லைமன்; ஈங்கு எல்லி வந்தீயக்
கண்டது எவன்? மற்று உரை.

நன்றும், தடைஇய மென்தோளாய்! கேட்டிவாயாயின், 5
உடனுறை வாழ்க்கைக்கு உதவி உறையும்
கடவுளர்கண் தங்கினேன்,
சோலை மலர்வேய்ந்த மான்பிணை யன்னார்பலர், நீ
கடவுண்மை கொண்டொழுகுவார்;
அவருள், எக்கடவுள்? மற்று அக் கடவுளைச் செப்பீமன்; 10

முத்தேர் முறுவலாய்! நாம் பணம்புக்கக்கால்
‘இப்போழ்து போழ்து’ என்று அது வாய்ப்பக் கூறிய,

அக்கடவுள், மற்று அக்கடவுள், அது ஒக்கும்,
நாவுள் அழுந்து தலைசாய்த்து நீகூறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/189&oldid=1130154" இலிருந்து மீள்விக்கப்பட்டது