பக்கம்:மருதநில மங்கை.pdf/208

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206புலவர் கா. கோவிந்தன்


விடலை! நீ நீத்தலின் நோய்பெரிது ஏய்க்கும்
நடலைப்பட்டு, எல்லா! நின்பூழ்."

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், அது மறைத்துக் குறும்பூழ்ப்போர் கண்டு வந்தேன் எனத், தலைவி உறழ்ந்து கூறி ஊடியது.

1. இவர்தரல் – அணுகவாராதே; 2. நாறு இருங்கூந்தல் – மணம் நாறும் கரிய கூந்தல்; 3. யாறு – வழி; போறி- போன்று உள்ளாய்; வந்தாங்கே – வந்தது போலவே; 4. மாறு – திரும்பிச் செல்; நின்னாங்கே – உனக்குரிய அப்பரத்தையர் மனைக்கே; நின்னாங்கே, சேவடி சிவப்பமாறு எனக் கூட்டுக. 5. செறிந்து – நெருங்கி; ஒளிர் – ஒளிவீசும்; வேறு இயைந்த– புதிதாக வந்த; 6. குறும்பூழ் – காடை; 7, ஓர்ப்பது – எண்ணுவது; 9. ஈகை–கொடை, காடை; இருபொருளும் கொள்க; காலிற் பிரியா–உன்னிடத்தினின்றும் பிரியாத; 10. கவிகையாழ் வாசிக்கக் கவிந்த கை; காடையைத் தழுவக் கவிந்தகை; புலையன் – பாணன்; காடை பிடிப்போன்; 11. இகுத்த–தாழ்ந்த; இனிஇனி–புதிதாக; 13. தபுத்த – கொன்றன; 14. கவ்வை அலர்; உளைந்தியாய் வருந்தாய்; அல்கல் – தங்குகின்ற; 15. தாரின்வாய் – மாலையிடத்து; 19. கொடிற்றுப்புண் – கன்னத்தில் செய்யும்புண்; 21. ஒட்டிய – உன்னை விடாது பற்றிய; 22. கொட்டிக் கொடுக்கும் – தெளிவாக அறிவிக்கும்; 24. போற்றிய–உனக்கு உறுதியாக உணர்த்தற் பொருட்டு; தொடுகு–தொட்டுச் சூள் உரைப்பேன்; 25, கை ஒன்று – உலகியல் ஒழுக்கம் எதையும்; 26. அறிகல்லாய் – அறியாய்; 27. தலைப்பெய்து தலை மேல் ஏற்றி; 28. பிழைத்தேன் – பிழைசெய்து விட்டேன்; 81. அளித்தி – அருள் பண்ணுவாயாக; 32. விடலை – ஒரு ஆண்பாற் சிறப்புப் பெயர்; 32. ஏய்க்கும் –அடையும்; 33. நடலைப்பட்டு – வஞ்சிக்கப் பட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/208&oldid=1130216" இலிருந்து மீள்விக்கப்பட்டது