பக்கம்:மருதநில மங்கை.pdf/228

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226புலவர் கா. கோவிந்தன்


என்பதை மறவாதே. தன் கொடுமை மறைத்து வந்து பாயும் அவ் வெள்ளத்தில் புகுந்து ஆட, உன் ஆசை அட்ங்கவில்லையாயின், மீண்டும் ஆண்டே செல்க ஆனால் ஒன்று. சென்று ஆடுங்கால், ஆங்குள்ள இள மணலுள் உன் கால்கள் சிக்கிக் கொள்ளுதலும் உண்டாம் அவ்வாறு சிக்குண்ட உன்னை, எவரும் கரை சேர்க்க மாட்டார். சேற்றில் சிக்கிச் சீரழியும் உன்னைக் காண்பவர், எள்ளி நகைப்பர். ஆகவே, புனலாடுங்கால் சிறிது விழிப்போடிருப்பாயாக!” என்று கூறுவாள் போல் “அன்ப! பரத்தையர் இன்பம் நுகரத் தேர் ஏறி அவர் சேரிக்குச் செல்க. செல்லும் நீ, ஆங்கே, உன்னைத் தம் வயப்படுத்தி, மீண்டு வாராவாறு தடுத்து நிறுத்தவல்ல பேரழகு மிக்க இளம் பரத்தையர் பலர் உளர். அவர் வலையுள் அகப்பட்டு விடுவையேல், பின்னர், அவரை விடுத்து வருதல் உன்னால் இயலாது. பரத்தையர் ஒழுக்கத்திற்கு அடிமையாகும் உன்னை ஊரார் கை கொட்டிச் சிரிப்பர். ஆகவே, விழிப்பாயிருப்பாயாக!” என அவன் ஒழுக்கக் கேட்டை உணர்த்தி வாயில் மறுத்தாள்.

“யாரை நீ? எம்இல் புகுதர்வாய்! ஒரும்,
புதுவ மலர்தேரும் வண்டேபோல், யாழி,
வதுவை விழவணி வைகலும் காட்டினையாய்;
மாட்டு மாட்டுஓடி மகளிர்த் தரத்தரப்

பூட்டுமான் திண்தேர் புடைத்த மறுகு எல்லாம் 5
பாட்டாதல் சான்ற நின்மாயப் பரத்தைமை
காட்டிய வந்தமை கைப்படுத்தேன்; பண்டெலாம்
கேட்டும் அறிவேன் மன் யான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/228&oldid=1130253" இலிருந்து மீள்விக்கப்பட்டது