பக்கம்:மருதநில மங்கை.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5
நீர் இதழ் புலராக் கண்

வமணிகள் நாற்புறமும் சிதறிக் கிடப்பது போல், நிறங்களால் வேறுபட்ட மலர் வகைகள் நிறைந்த ஒரு பொய்கையில், சேவலும் பெடையுமாய் இரு அன்னங்கள் இணை பிரியாது வாழ்ந்திருந்தன. ஒரு நாள் அன்னங்கள் இரண்டும் அப்பொய்கை நீரில் உலாவந்தன. அப்பொழுது நீரளவிற்கு மேலும் நீண்டு வளர்ந்து நின்ற ஓர் இலை சேவலை மறைத்துக் கொண்டது. உடன் வந்த சேவல், திடுமென மறைந்து போகவே, கலங்கிற்றுப் பெடையன்னம். பொய்கை முற்றும் ஓடி அலைந்து தேடிப் பார்த்தது. எங்கும் அதைக் கண்டிலது. அதனால், உள்ளம் சோர்ந்து, உடல் தளர்ந்து ஒருபால் ஓய்ந்து நின்றது. அந்நிலையில், வானத்தே எழுந்த வெண்மதியின் நிழல், அப் பொய்கை நீரில் எதிரொளித்தது. அந் நிழலைத் திடுமெனக் கண்ட பெடையன்னம், அதைத் தன் காதற் சேவலாகவே கருதி விட்டது. அதனால், அந் நிழலை நோக்கி விரைந்தது. அந்நிலையில், இலைமறைவினின்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/36&oldid=1129451" இலிருந்து மீள்விக்கப்பட்டது