பக்கம்:மருதநில மங்கை.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38புலவர் கா. கோவிந்தன்


மனைவி வருந்திய வருத்த மிகுதியினையும் விளங்கக் கூறிய பின்னர், “அன்ப! உன் ஒழுக்கக் கேட்டால், நாங்கள் உறக்கம் ஒழிந்து அழியினும் அழிக. அது குறித்து இனி யாம் வருந்தேம். ஆனால், உனக்கு உற்ற துணைவனாய், நீ விரும்பும் பரத்தையர் மனைக்கண் இருந்து, யாழிசைத்துப் பிழைக்கும் அப் பாணன், இனி, ஈங்கு வாரானாகுக. அவனைக் காணப் பொறா எம் கண்கள். அவன் காட்சியே எம்மைக் கடுந்துயர்க்கு உள்ளாக்குகிறது!” எனக் கூறி அவனுக்குக் கதவடைத்தாள்.

“மணிநிற மலர்ப்பொய்கை மகிழ்ந்தாடும் அன்னம், தன்
அணிமிகுசேவலை அகல்அடை மறைத்தெனக்,
கதுமெனக் காணாது கலங்கி, அம்மடப்பெடை
மதிநீழல் நீருள்கண்டு, அதுஎன உவந்துஓடித்,
துன்னத் தன்எதிர்வரூஉம் துணைகண்டு, மிகநாணிப் 5
பன்மலர் இடைப்புகூஉம் பழனம்சேர் ஊரகேள்;

நலம்நீப்பத் துறந்து, எம்மைநல்காய் நீ விடுதலின்,
பலநாளும் படாதகண் பாயல்கொண்டு இயைபவால்;
துணைமலர்க் கோதையார் வைகலும் பாராட்ட
மணமனைத் ததும்பும் நின்மணமுழவந்து எடுப்புமே; 10

அகலநீதுறத்தலின், அழுதுஒவா. உண்கண் எம்
புதல்வனை மெய்தீண்டப் பொருந்துதல் இயைபவால்;
நினக்குஒத்த நல்லாரை நெடுநகர்த் தந்து,நின்
தமர்பாடும் துங்கையுள் அரவம்வந்து எடுப்புமே;

வாராய்நீ துறத்தலின், வருந்திய எமக்கு ஆங்கே 15
நீர்இதழ் புலராக்கண் இமைகூம்ப இயைபவால்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/40&oldid=1129461" இலிருந்து மீள்விக்கப்பட்டது