பக்கம்:மருதநில மங்கை.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8


தோலாமோ யாமெனின் !

ணவன் பரத்தை வீடு சென்று வாழக் கலங்கிய ஒரு பெண், ஒரு நாள், தன் ஊர் நடுவே உள்ள ஊருணித் துறைக்கண் நின்று, அதன் அழகைக் கண்டு, அக் காட்சியால், தன் கவலை மறந்து களித்திருந்தாள். நீர் நிலையின் கரையில், நீரை ஒட்டி வளர்ந்திருந்த பகன்றைக் கொடிகள், வெள்ளியாலாய வெண்ணிறத் தட்டுக்களை வரிசை வரிசையாக வைத்திருத்தல் போல், வெண்ணிற மலர்களால் நிறைந்திருந்தன. அம்மலர்களில் படுமாறு நீண்டு வளர்ந்திருந்தது ஒரு தாமரை அரும்பு. சிறிது பொழுதிற்கெல்லாம் அது மலர்ந்தது. அக்காட்சி வெள்ளித் தட்டில் வாய் வைத்து, அதில் வார்த்துள்ள கள்ளை உண்டு மகிழ்பவள் முகம் மலர்ந்து தோன்றுவது போல் தோன்றக் கண்டு, துயர் மறந்து மகிழ்ந்தாள்.

அக் காட்சியால், சிறிதே கவலை மறந்து மகிழ்ந்த அவள், அக் காட்சி அவள் கணவன் ஒழுக்கக் கேட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/55&oldid=1129486" இலிருந்து மீள்விக்கப்பட்டது