பக்கம்:மருதநில மங்கை.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1



‘எம்மை நீ அருளினை’

ழகாலும் அறிவாலும் சிறந்தாள் ஒருத்தி. அவளை விரும்பி மணந்து மனையற வாழ்வு மேற்கொண்டான் ஓர் இளைஞன். அவர்கள் இல்லறம் இனிது நடைபெற்று வந்தது. சில காலம் சென்ற பின் ஒருநாள், உயர்ந்தோர் கூடும் அவ்வூர் மன்றத்தில், பரத்தையர் குடியில் வந்தாள் ஓர் இளம் பெண்ணின் ஆடல் அரங்கேற்றம் நிகழ்ந்தது. இளைஞனும் சென்று அதைக் கண்டான். அவள் ஆடல் பாடல்களில் அறிவை இழந்தான். அவள்பால் ஆசை கொண்டான். ஆட்ட முடிவில், அவள் அளித்த அழகிய மாலையைப் பெருவிலை கொடுத்துப் பெற்றுக்கொண்டு, அவளோடு அவள் மனை புகுந்தான். அன்று முதல், அம்மனையிலேயே வாழத் தொடங்கினான். தன் மனையை மறந்தான். மனைவியை மறந்தான். பரத்தையோடு சென்றான். புதுப் புனலாடி மகிழ்ந்தான். அவள் கையோடு . கைபிணைத்துத் துணங்கைக் கூத்தாடிக் களித்துத் திரிந்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/7&oldid=1129296" இலிருந்து மீள்விக்கப்பட்டது