பக்கம்:மருதநில மங்கை.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை87


மணம் தராது. சிறிதே மணம் தரினும் அது நறுமணம் ஆகாது. அதுபோல், உள்ளுணர்வின்றி, ஊரார் உரைக்கு அஞ்சி, ஈண்டு வந்து புணரும் உன் புணர்வில் பேரின்பம் காணேன். அக்கூட்டத்தை நான் விரும்பேன். அக்கூட்டம் கொடிய பனிக்காலம் போல், எனக்குக் கொடிய துயர் தரும். ஆகவே அது வேண்டேன்!” என்று கூறி வழிமறித்து நின்றாள்.

“பன்மலர்ப் பழனத்த பாசடைத் தாமரை
இன்மலர் இமிர்புஊதும் துணைபுணர் இருந்தும்பி,
உண்துறை உடைந்தபூப் புனல்சாய்ப்பப் புலந்துஊடிப்
பண்புடை நன்னாட்டுப் பகைதலை வந்தென,

அதுகைவிட்டு அகன்று ஒரீஇக், காக்கிற்பான் குடைநீழல் 5
மதிபடர்ந்து இறைகொள்ளும் குடிபோலப், பிறிதும்.ஒரு பொய்கை தேர்ந்துஅலமரும் பொழுதினான், மொய்தப,
இறைபகைதனிப்ப, அக்குடி பதிப்பெயர்ந்தாங்கு
நிறைபுனல் நீங்கவந்து, அத்தும்பி, அம்மலர்ப்

பறைதவிர்பு அசைவிடுஉம் பாய்புனல் நல்ஊர! 10
நீங்குங்கால் நிறம்சாய்ந்து புனருங்கால் புகழ்பூத்து
நாம்கொண்ட குறிப்பிவள்நலம் என்னும் தகையோதான்,
எரிஇதழ் சோர்ந்துஉக, ஏதிலார்ப் புணர்ந்தமை
கரிகூறும் கண்ணியை ஈங்குளம் இல்வருவதை;

சுடர்நோக்கி மலர்ந்து, ஆங்கேபடின் கூம்பும் மலர்போல்என் 15
தொடர்நீப்பின், தொகும் இவள்நலம் என்னும் தகையோ தான்,
அலர்நாணிக் கரந்தநோய் கைம்மிகப், பிறர்கூந்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/89&oldid=1129650" இலிருந்து மீள்விக்கப்பட்டது