பக்கம்:மருதநில மங்கை.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14


புல்லல் எம் புதல்வனை!

செந்நெல் வளம் சிறந்த மருத நில மகள் அவள். அவள் கணவன், அவளையும், அவள் மகனையும் மறந்து, ஊரில் உள்ள பரத்தையர் பின்செய்று, அவர் ஆடல் பாடல்களால் அறிவிழந்து திரிந்தான். அதனால் வருந்தியிருக்கும் அவள், ஒரு நாள், தன் வயலைப் பார்க்கச் சென்றிருந்தாள். பறவைகள் பல கூடிப் பெரிய ஆரவாரம் செய்து கொண்டிருந்த வயலில், செந்நெல் செழிக்க வளர்ந்து, கதிர் முற்றிக் காட்சி அளித்தது. அவ்வயலைச் சுற்றி நோக்கினாள். வயலிடையே ஒரு தாமரை மலர் மலர்ந்திருந்தது. அதன் தண்டு முள் நிறைந்தது என்பதையும் பாராமல், ஒரு கதிர், அதன் மீது படிந்து, அதை அடியோடு சாய்த்து, அம்மலர்மீது கிடந்து உயர்ந்து தோன்றிற்று. அவ்வழகிய காட்சியைக் கண் குளிரக் கண்டிருந்தாள். அக்காட்சியைக் கண்டுகளிக்கக் கணவன் தன்னுடன் இல்லையே என்று கலங்கினாள். இந்நேரம், அவன், பல்லோர் புகழ, அரங்கின்மீது ஆடி மகிழ்விக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/91&oldid=1129653" இலிருந்து மீள்விக்கப்பட்டது