பக்கம்:மருதாணி நகம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 மருதாணி நகம்

பார்வைக்குப் பார்வை பதவிசு மாறியிருந்தது. கொணர்ந்தவள் கொவ்வைப்பழமாளுள்.

ஏந்தியவள் இலந்தைப் பழமானுள்.

" ஆயி பஞ்சவர்ணம் உள்ளுக்குத் தாய்வூட்டுக் குள்ளாற வச்சுப்புட்டு அகல் ஏத்திவச்சு கை தொழுது புட்டு வா. சல்திபண்ணு. பதமா, பதனமா சோத்தங் காலை தூக்கி வச்சுக்கிட்டு நட. நம்ம சாதிசனங்க கட்டிக் காத்துவந்த நாட்டு நடப்பு அல்லாத்தையும் தவிடுபொடி யாக்கிப்புட்டுத்தான் இப்பைக்கு நானு இங்கிட்டாலே வந்திருக்கேன். தாம்பாளத்துக்கு அடியிலே வெத்திலை பாக்குக்கு மேலே நூறு ருவாத் தாளு ரெண்டு கைவிரல் வீக்கத்துக்குக் காணும்படியா வச்சிருக்கோம். இதான் எங்கவூட்டுப் பரிசப்பணம். அக்கரைச் சீமையில எட்டுக் கண் விட்டெறிய, நகரம்-பாலைவனம் பாளையப் பட்டுக்கு ஒசத்தியா வாழ்ந்து, இக்கரைச் சீமைப்புறத்திலே கியாதி கட்டி வாழ்ந்த கங்காணிவூட்டு மருமகப் பொண்ணு வரப் போற ஒனக்கு இதுக்குக் கொறைஞ்சா நாங்க பணம் மொய் எழுதுவோம்? ஒங்கதை காரணங்களை மறந்துப் பிடு; இனிமேலே, எங்கவூட்டு நடப்புக்கரைக்குத் தான் ஒனக்குப் பொளுது காணும். சரி, சரி, நானு வயசு போ ன வ ள் தொணதொணன்னு பிளுத்திக்கிணு நிக்கிறேன். ஒங் காலு வலிக்கும் போயிட்டுத் திரும்பு சுருக்கண வா தம்பி இன்னும் ரவ்வைக்குச் சோத்துப் பருக்கை உண்ணல்லே. இந்த விசயம் பொட்டியும் போழையுமா முடிஞ்சிதின்னத்தான் அதுக்கு ஒடம்பிலே உசிருஒட்டும். மண்ணிலேவும்ஒட்டுதலைஉண்டாக்கும்..."

விட்டுக் காட்டாமல், ஒட்டிக்காட்டிய அத்தை உறவுக்

காரி, இது பரியத்தம் காசிராமேசுவரம் பயணம் சென் றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/122&oldid=612027" இலிருந்து மீள்விக்கப்பட்டது