பக்கம்:மருதாணி நகம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 உருக்காட்டுப் படலம்

ஆடியில் தெரியும் அரிசி, உலைவைக்க உதவுமா ? 'உதவாது என்னும் உண்மை நிலையினை உய்த்துணரு வதற்கு, பஞ்சவர்ணத்திற்கு இவ்வளவு நேரம் பிடித்தது. பித்துப் பிடித்தவளாகவே உருமாறியிருத்த அவள், இது வரை நினைத்திருந்தது ஒன்று: 'முத்தையன் மச்சான் மனசு விரும்பி நமக்குத் தந்ததுகளை அவ்வளவு சின்னத் தனமாவா வாய் துணிஞ்சு கேட்டுப்பிடும்? ஊகூம், கேட்காது!’ என்றுதான் அவள் நம்பியிருந்தாள். அந்த நம்பிக்கை தோன்றித் தோன்றி, அவளைத் தெம்புடன் வாழச் செய்து வந்தது. ஆல்ை அந்நம்பிக்கைக்கும், கண்ணுடியில் பிரதிபலித்துத் தெரியும் அரிசிக்கும் கடுகத் தனை வித்தியாசமும் கிடையாது என்பதை இப்பொழுது புரிந்து கொண்டாள் !

இரவு அவளுக்குச் சிவராத்திரி விடிந்ததும், விடியா ததுமாக, அவள் ஒரு முடிவுக்கு வந்தாள்: வரவேண்டிய வள் ஆளுள்.

அம் முடிவு இதுதான்: 'வெள்ளக்காடாய் எம் பேரிலே பந்தமும் பாசமும் வச்சுக்கிட்டிருக்கிறவுக இப்பைக்கு எங்க முக்குடிமச்சான் ஒருத்தர்; நாட்டா மைக் கார ஐயா மத்தவுக; வளவிக்காரத் தாத்தா மூளும் ஆளு இந்த மூணு பேரிலே, கைக்கு மெய்யாப் பேச வாய்க்காத வுக எங்க நேசமச்சான்காரக. ஏன்ன, கங்காணி மகன் விசயமாப் போயி, அவுக கிட்டே பணம் காசு மார்பத்துப் பண்ண முடியுமா? இதுக்கு முன்னடியே அந்தப் பழைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/128&oldid=612033" இலிருந்து மீள்விக்கப்பட்டது