பக்கம்:மருதாணி நகம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l 9 "ஆத்தா சத்தியம் !..."

முடிந்து விடுமா அந்தக் கதை? இல்லை, முடிந்து விடக்கூடியதா, பஞ்சவர்ணத்தின் கதை? வளமுடைத் தஞ்சாவூர் உருட்டுப் பொம்மையைப் போல அவள் தலை சுற்றிக் கொண்டிருந்தது. விரி காவிரியின் புதுப் புனலுக்கு அவளது நயனங்கள் வடிகாலாக ஆயின. தண்ணிர் இறவை காணுமல் சோகை பிடித்துக்கிடக்கும் நாற்றங்கால் தளைகளுக்குச் சமதையாக அவளுடைய முகம் வெளிறிப் போனது. ஏகாலி காணியாட்சி’ பாத்தியதை கொண்டாடும் துறைக்குரிய செம்பூரான்கல் அவள் மண்டையில் ஒண்டியது. நைந்து பிய்ந்து கிழிந்த ரோஜா மலராயிற்று அவள் வாழ்வு. ரோஜாப் பூவின் மனத்தை அமுக்கி விட்டி வேடிக்கைகாட்டி வேடிக்கை பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தது, ரோஜாவின் அடியில் ஒட்டியிருந்த முள் ஒன்று.

முள்ளும் மணமும் நிறைந்தது தான்; வாழ்வும் வாழ் வின் மணமும்.

அதற்காக, முள்குத்தாமல் இருக்குமா?

முள் குத்தினுல்தான் மனம் சாம்பித் திரியலாமா ?

மணத்தை நுகர மனம் இருக்கையில், முள்ளையும் நுகர மனம் இருக்க வேண்டாமா?

பாவம், பஞ்சவர்ணத்திற்கு வாழ்க்கை எனும் ஆடு களத்தின் சூட்சுமமோ, அன்றிச் சூத்திரமோ அவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/148&oldid=612053" இலிருந்து மீள்விக்கப்பட்டது