பக்கம்:மருதாணி நகம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 153

அவள் கைகளில், முத்தையன்' என்னும் பெயர் எழுதப்பட்டிருந்த அந்தக் கருக்கரிவாள் இருந்தது.

முத்தையன் வீறுகொண்டான். "இன்னு நெஞ்சழுத்தம் ஒனக்கு இப்பிடிச் சிரிக்கிற துக்கு? இல்லே, கேக்கிறேன்!” விருப்புடன் கேட்டான்! "ஏனுங்க மச்சானே! சிரிப்புக்குக்கூடவா நீங்க வாயிதா போட்டிருக்கீங்க? ரவைப் பொழுதுக்கு முந்திவரை, நானு அழுதுக்கினுதான் இருந்தேன். இனி அந்தக் காலம் மலையேறிப் போச்சுது. ஐயாவே, மச்சான்கார மவராசரே! ஒங்க மனசுப்படியே காலம்பற மம்மலோட பஞ்சாயம் வையுங்க. அப்ப வந்து நானு பேசிக்கிடுறேன். இப் ைப க் கு இந்தச் சாமான் தட்டை மட்டும் கையோட கொண்டுக்கிட்டுப்போறேன்!” என்று உள்ளடங்கிய நைத்தியச் சிரிப்பை உதிர்த்து விட்டுப் பிரிய முனைந்து, கிழவியிடம் விடை’ சொல்லிக் கொண்டாள்.

வெளிவாசலில் விளக்கெண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதன் மங்கலான ஒளி ரேகை, வாசல் முகப்புத் தூணில் கட்டப்பட்டிருந்த செம்மறிக் கடாவின் முகத்தில் தெறித்தது. காகம் ஒன்று கரைந்தது. பசுவும் கன்றும் பாசப் பரிவர்த்தனையில் க ட் டு ண் டு குரல் கொடுத்தன. -

அவள் வைத்திருந்த அந்தக்கருக்கரிவாளை மடக்கிப் பறிக்கவேண்டு மென்றிருந்தான். ஆத்திரம் அவன் நினைவைப் பறித்தது. ஏமாந்தான் முத்தையன்!

உச்சாடனம் பெற்றவளைப்போல வாசலுக்கு மடங்கி ள் பஞ்சவர்ணம். கொண்டைப் பூச்சரம் உதிர்ந்து விழுந்தது. கோதியமுடி கலைந்தது. செழித்துத்தழைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/155&oldid=612060" இலிருந்து மீள்விக்கப்பட்டது