பக்கம்:மருதாணி நகம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 79

நெல் மணிகள் முற்றக்கனிந்ததும், அவற்றின்மீது ஒட்டிக்கிடக்கும் பனிமணிகளை உதிர்த்து உதறிவிடுவதை ஒப்ப, அவள் தன் கண்களிடைத் தேங்கிய சுடுநீரைச் சிதறிவிட்டாள். அந்தம் காட்டிய கைவிரல் நகங்களிலே விளங்கிய மருதாணி ரேக்கைப் பார்த்துப் பூரித்து, அடங்கிவிட்ட அந்த நினைப்பு ஒன்று டனே யே அவள் அப்பொழுது ஓடிக் கொண்டிருந்தாள்...

காலத்தோடு அவள் கால்களும் தேய்ந்தன!

திருநாளூர்த் திருப்பத்தில் குறுக்குச் சாலிட்டு ஓடிய ஒற்றையடிச் சுருக்குப் பாதையில் ஆவணத்தாங் கோட்டை அழகு மடங்கிய நேரத்தில், "இந்தாப் பாரு: பஞ்சவருணம்!” என்று குரல் அனுப்பி மடக்கி நின்ருன் கோலப்பன்.

'நீங்க இந்த மட்டுக்கும் வூட்டை நாடிப் பறியலையா? கடையிலே ஆளுப்பேரு வேறே நாதியே இல்லீங்களே?”

“எனக்கு இங்கிட்டு ஒரு சோலி வந்திருச்சு. போக வாய்க்கலை. ஆமா நீ இப்ப எங்கணே ஓடிக்கிட்டு இருக்குறே?”

“வந்து...நானு அந்தச் சீமோட்டுக்காரங்க வூட்டுப்

பக்கம்...!”

"மெய்யாலுமா? அம்மாந் தொலைவுக்கு மேக்கரிச்சுப் போயிருச்சா சங்கதி?"-அரளிப் பூ க்க ள் அவன் நயனங்களை அண்டின!

"என்னங்குறேன், சொல்றிக?" "ஒனக்கு வைரியான ஆளு அந்த முத்தையன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/81&oldid=611986" இலிருந்து மீள்விக்கப்பட்டது