பக்கம்:மருதாணி நகம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 85

“ என்ன அக்கா இது ; சின்னஞ்சிறுசு இப்பிடி அழு தாக்க, ஒன்னைக் கேலி செய்யமாட்டாங்க ?”

“ அதெல்லாம் எதுவும் நடக்கிறதுக்கு இனிமே வாய்க்காது !”

部《 அக்கா !”

" ஆமா, கோவிந்தம்மா, பழைய மச்சான் குறுக்கே விழுந்து தடுத்திச்சு. நான் திகைச்சுப் போனேன். அதுக்குள்ள, அது எங்கணயோ காத்துப்பட்டு மயங்கின தாட்டம் தலையை உசுப்பிக்கினு வேறே பாதையிலே மறுகி ஓடியிருச்சுது!...”

தன்னுடைய கண்ணிரைத் துடைத்தவளைக் கைப் பற்றி முகத்தில் ஒற்றிக்கொண்டாள் பஞ்சவர்ணம். ஒரு நடப்பில், வேறு நிகழ்ச்சி நடைபயின்றது. ஒருவாட்டி அந்த மச்சான் தன்னுேட தோட்டத்துப் பக்கம் வரச் சொன்னதுக்காக, நான் அது மேலே கோவிச்சுக்கிட, உடனே அது சின்னப்புள்ளை கணக்கிலே பொருமிச்சு. எனக்கு நெஞ்சு பொறுக்கலே. அது கண்ணிரை எம்பிட் டுச் சுங்கடி முந்தானையினலே துடைச்சடியுந்தான், அதுக்குச் சிரிப்பு வந்திச்சு மறைந்தவனின் அழகு முகத்தை அவள் நினைத்துக் கொண்டாள். ஒரு வகைப் பட்ட பயம்தான் அவளுள் எழுந்தது. அவளையும் அறியா மல், அவளது பூங்கரங்கள் இரண்டும் குவிந்தன. அஞ்சலி முத்திரை வடிவம் கண்டது !

"இந்த முத்தையன் அ ண் ணு ச் சிக் கு என்ன வந்திச்சு ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/87&oldid=611992" இலிருந்து மீள்விக்கப்பட்டது