பக்கம்:மருதாணி நகம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 மருதாணி நகம்

அவருக்குக் கைகூப்பு தெரிவித்தாள். சுட்ட வடைகளை இட்டு நிரப்பினுள். குடிக்கப், பாலைவனம் பானைத் தண் னிரை வைத்தாள் பஞ்சவர்ணம்.

எல்லாவற்றையும் ஜாடையாக ஒரக்கண் பதித்துப் பார்த்த நாகுடியார், தேநீருக்குச் சில்லறை கொடுக்காமல் நகரவே, "ஐயா, காசு!" என்று நாகுக்காகக் கேட்டு வாங்கி முன்ருனச் சுருக்குப் பையில் போட்டுக்கொண்டு லேசான புன்முறுவல் தழைக்க, பக்தி பூர்வமான பாவனை தப்பாமல், மணியக்காரருக்குச் சேவை செய் தா ள் பஞ்சவர்ணம் !

அந்தி சாய்ந்தது.

பட்டாமணியம், அந்தப்பெண் பஞ்சவர்ணத்தை நெருங்கி அவளுடைய செவிகளிலே ஏதோ கமுக்கமாக ஒதினர். பிறகு, திரும்பிச் சென்ருர்.

கொண்டல் கண்ட கலாபமயில் ஆளுல் பஞ்சவர்ணம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/98&oldid=612003" இலிருந்து மீள்விக்கப்பட்டது