பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

amyloid : அமிலாய்ட் : மாச்சத்து போன்ற பொருள். அமிலாய்டாசிஸ்' எனப்படும் அமிலாய்ட் திரட்சிக் கோளாறுகளில் இந்தச் சிக்கலான பொருள் அளவுக்குமேல் திரள்கிறது.

amyloidosis : அமிலாய்ட் திரட்சி நோய், ஏதேனும் உறுப்பில் குறிப்பாக நுரையீரலிலும், சிறுநீரகத்திலும் அமிலாய்ட்' எனப்படும் மாச்சத்து போன்ற பொருள் படிதல்.

amylolysis : மாச்சத்துச் செரிமானம் : மாச்சத்துப் பொருள்கள் செரிமானமாதல். amylopsin : கணையநீர் : மாச்சத்தினைச் சர்க்கரையாக மாற்றும் கணைய நீர். இது கார ஊடு பொருளில் கரையாத மாச்சத்தினை கரையும் சர்க்கரையாக மாற்றுகிறது.

amylum அமைலம் : மாச்சத்துப் பொருள். amytal: அமிட்டால் : அமிலோ பாரபிட்டோன்' என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

anabolic compound : உயிர்ச் சத்துக்கூட்டுப் பொருள் : உடலிலுள்ள புரதத்தை கூட்டிணைவு செய்கிற வேதியியல் பொருள். நோய் நீங்கி உடல் தேறிவரும் காலத்தில் இது பயனுடையதாகும். பல்வேறு ஆண்பால் இயக்கு நீர்மங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை

anabolism : உயிர்ப்பொருள் கூட்டமைப்பு: வளர்வினை : கட்டுமான மிகைவு; வளர்மை : உயிர்ச் சத்தினை அடிப்படையாகக் கொண்ட சேர்மான வகைகள் வேதியியல் முறையில் உருவாதல்.

anacidity: அமிலத்தன்மையின்மை

அமிலமின்மை - இயல்பு அளவுக்கு அமிலத்தன்மை இல்லாதிருத்தல் முக்கியமாக இரைப்பை நீரில் அமிலத்தனமை இல்லாதிருத்தல்.

anaemia : குருதிச் சோகை : சோகை; வெளிறு : இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவாக இருத்தல். கடுமுயற்சியின் போது சோர்வு, மூச்சடைப்பு போன்றவை ஏற்படுதல் இதன் நோய்க்குறிகளாகும். இது பல்வேறு காரணங்களால் உண்டாகிறது. இந்தக் காரணத்திற்கேற்ப சிகிச்சையளிக்கப்படுகிறது.

anaerobe : ஆக்சிஜன் இன்றி வாழும் உயிர்; அல்வனி உயிரி : நேரடியாக ஆக்சிஜன் இல்லாமல் வாழத்தக்க உயிர் வகை.

anaerobic respiration அல் ஆக்சிஜன் மூச்சுவிடல் : ஆக்சிஜன் குறைவாக இருக்கும்போதே மூச்சு விடுதல். முதிர் கரு இவ்வாறு சுவாசிக்கிறது.

anaesthesia : உணர்ச்சியிழப்பு; உணர்ச்சியின்மை : உணர்ச்சி மயக்கம்; உணர்ச்சியின்மை ; நோவுணராமை உறுப்பெல்லை உணர்வு நீக்கத்தின் போது வேதனையுணர்வு மூளையை எட்டாத வகையில் நரம்பு இயக்கம் நேரடியாகத் தடுக்கப்படுகிறது. முதுகந்தண்டில் ஓர் உறுப்பெல்லை உணர்வு நீக்கி மருந்தினை ஊசிமூலம் செலுத்தி உணர்விழக்கச் செய்யப்படுகிறது. மயக்கமடைவதற்கு குளோரோஃபார்ம் போன்ற மயக்க மருந்துகளும் உடல் உறுப்பை உணர்விழக்கச் செய்ய கோக்கைன் போன்ற உணர்வின்மை ஊட்டும் பொருள்களும் பயன்படுகின்றன.

anaesthesiology : உணர்வு நீக்கியல், ஊட்டு மயக்கவியல் : உணர்வு நீக்கு மருந்துகள், அவற்றைச் செலுத்துதல், அவற்றின் விளைவுகள் பற்றிய அறிவியல்.

anaesthetic : உணர்வு நீக்கி மருந்து (மயக்க மருந்து) உணர்வகற்றி; உணர்விழப்பி : (1) உணர்