பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நுழைவாயில்

எனது கால் நூற்றாண்டுக் கனவுகளிலொன்று இன்று நனவாக நூலுருவில் உங்கள் கரங்களில் தவழ்வது எனக்கு எல்லையில்லா மகிழ்வூட்டுவதாயுள்ளது நான் இலக்கியத்தையும் மொழியியலையும் முதன்மைப் பாடங்களாக எடுத்துப் படித்தவன் என்றாலும் எனக்கு எப்போதும் அறிவியல்,தொழில் நுட்பப் பாடங்களில குறிப்பாக மருத்துவத்துறை நூல்களைப் படிப்பதிலும் அவற்றைப் பற்றித் தமிழிலே சிந்திப்பதிலும் எனக்கு எப்போதுமே விருப்பம் அதிகம். மருத்துவத்தைத் தமிழில் சொல்ல வேண்டும் என்ற எனது விருப்பத்தை என் இளைய மகன் செம்மல் மூலம் நிறைவேற்றிக் கொள்ள விரும்பியதன் விளைவே அவன் மருத்துவ மாணவனாகியது. மருத்துவக் கல்லூரியில் அவன் காலடி எடுத்துவைக்குமுன் அவனிடம் என் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்தினேன்:

"உன் எதிர்கால நல்வாழ்வுக்காக மட்டும் உன்னை நான் மருத்துவம் பயில அனுப்பவில்லை. என்னுள் பல ஆண்டுகளாகக் கனன்று கொணடிருக்கும் பேராசையொன்றை உன்மூலம் நிறைவேற்றி, உன் வாழ்வோடு என் வாழ்வையும் வெற்றியுடையதாக ஆக்கிக் கொள்ள வேணடும் என்ற பேரவா எனக்குண்டு. நீ மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடித்தபின் உனனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மருத்துவ நூல்களைத் தமிழில் தர வேண்டும். இவ்வெண்ணத்தை மருத்துவக் கல்லூரியில் கால்வைக்கும்போதே உறுதிமிக்க முடிவாக உன் உள்ளத்தின் அடித்தளத்தில் அழுத்தமாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். மருத்துவத்தை ஆங்கில மொழிமூலம் படித்தாலும் அதைத் தமிழில் சொலவது எப்படி என்ற சிந்தனை எப்போதும் உனக்கு இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி நீ தமிழில் சொல்ல விழையும் அறிவியல், மருத்துவச் செய்திகளை இலக்கிய நயத்தோடும் கற்பனைத் திறனோடும் புனைகதை வடிவில் இயன்றவரை கூற முற்பட வேண்டும், அப்போதுதான் சாதாரணமானவர்கள் புரிந்து கொள்ளக் கடினமாக உள்ள மருத்துவச் செய்திகளும் எளிமையாக அமைந்து, சாதாரண படிப்புள்ளவர்களுக்கும் எளிதாகப் புரியவும் விரைவாக அவர்களைப் போய்ச் சேரவும் வழியேற்படும். இதுவே, மகன் என்ற முறையில் தந்தையாசிய எனக்கு நீ செய்யும் உண்மையான கைம்மாறாக இருக்கும். இதைத் தவிற வேறு எதையும் நான் உன்னிடம் எதிர்பார்க்கவில்லை. இதைச் செய்வதாக எனக்கு நீ உறுதி மொழி தர வேண்டும்" என்று நான் கூறியபோது, "உங்கள் விருப்பத்தை நிறைவேற்று