பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

allochiria

99

allopest


allochiria : இயல்பு மீறிய ஊறு உணர்வு : தொட்டறியக் கூடிய உணர்வு இயல்புக்கு மீறியதாக இருத்தல். இதனால் நோயாளியின் உடலில் அளவு கடந்த தொடு உணர்வுத்துண்டுதல் ஏற்படுகிறது.

allochezia : மலமிலா பேதி.

allochromasia : நிறமாற்றம் : தோல் அல்லது முடியின் நிறம் மாறுகின்ற நிலை.

allocinesia : விருப்புக்கு மாறான பக்கவாட்டு நடை.

allodynia : மாற்றுத் தூண்டல் : மாற்றுத் துண்டல்களால் உண் டாகும் வலி.

alloeosis : நோய்த் தன்மை மாறல்.

alloerotism : பிற பாலின ஈர்ப்பு : பிற பாலினத்தின் மீது ஏற்படும் பாலின ஈர்ப்பு.

allogeneic : மாற்றப்பண்புக்கூறு : ஒரே இனத்தில் காணப்படும் மாறுபட்ட மரபுக்கூறுகள்.

allograft : உறுப்பு மாற்று அறுவை மருத்துவம்; ஓரினத் திசு ஒட்டு : ஒருவரிடமிருந்து ஒரே வகை உறுப்பு மாற்று உயிர்த் தற்காப்புப் பொருள்களைக் கொண்டிராத இன்னொருவருக்கு ஒர் உறுப்பினை அல்லது திசுவினை மாற்றிப் பொருத்தும் அறுவை மருத்துவம்

alloimmune : மாற்றத்தடுப்பு ஆற்றல் : ஒரு குறிப்பிட்ட மாற்றப் பண்புக்கூறுகளை உடற்காப்பு ஊக்கிக்கு மட்டும் தடுப்பாற்றல் உருவாதல்.

allomorphism : அமைப்பு மாற்றம்; வடிவமாறுதல் : அணுக்களின் வடிவமைப்பில் மாறுதல் ஏற்படுதல்; வேதிப்பண்புப் பொருளில் மாற்றம் எதுவும் ஏற்படாமல் அதன் அமைப்பில் மட்டும் மாற்றம் அடையும் தன்மை.

allopath (allopathist) : 'எதிர் முறை' மருத்துவர்.

alopathic : 'எதிர்முறை' மருத்துவம் சார்ந்த : நோய்க் குறிகளுக்கு எதிர்பண்புகள் ஊட்டுவதன் மூலம் நோயைக் குணப்படுத்தும் மருத்துவ முறையைச் சார்ந்த,

allopathy : 'எதிர்முறை' மருந்துவம் : நோய்க்கூறுகளுக்கு எதிர்க் கூறுகளை ஊட்டுவதன் மூலம் நோய் தீர்க்கும் மருத்துவ முறை.

alopecia : வழுக்கை; சொட்டை; மயிர்க்கொட்டு.

alloplasia : செயற்கைத் திசு வளர்ச்சி : குறிப்பிட்ட திசுக்கள் இயல்பாக வளராத இடத்தில் அத்திசுக்களை வளரச் செய்தல்.

allopest : செயற்கைப் பதியம் : உயிரற்ற அல்லது செயற்கைப் பொருளில் தயாரிக்கப்பட்ட ஒரு பதியப் பொருள்.