பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1017

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

spermary

1016

spermatophore


குறைவாக இருக்குமானால் அந்த விந்தணு கருஊட்டம் ஆற்றல் இல்லாத தாகும் 30-50 கோடி விந்து அணுக்கள் இருந்தால் அது இயல்பு நிலை.

spermary : ஆண் கரு மூலச்சுரப்பி : ஆண் விதைக் கழலை.

spermatheca : விந்து வாங்கி.

spermatic : விந்து சார்ந்த; விரை : ஆண் கருவுயிர் நீர்மத்துக்குரிய.

spermatic cord : விந்துக்குழாய் விரை நாண்.

spermaticidal : விந்தணுக் கொல்லி; விந்தணு அழிப்பி : ஆண் விந்தணுக்களைக் கொல்லக்கூடிய.

spermatid : விந்தணு மூலம் : விந்தணு மூல அணுவிலிருந்து வந்த ஓரணு விந்தணுவாக வளர்கிறது.

spematoblast : விந்து மூலம்; ஆண் கருவுயிர்மக் கருமூலம்.

spermatoçoele : விந்து வீக்கம்; விந்துக்கட்டி : விந்தணுக்கள் கொண்ட விரைமேவி அல்லது நீர்க்கட்டி.

spermatocyst : விந்துநீர்ப்பை : 1. விந்துப்பை, 2 விந்தணு வீக்கம்.

வி ந து ஆ ற் ற ல் விந்துக்கட்டி : விந்தனுக்கள் இல் லா த 3 0 – 5 0

spermatocystotomy : விந்துப்பை அறுவை : விந்துப்பைகளைக் கீறிவடித்தல்.

spermatocyte : விந்தணு முன் அணு : விந்தணு மூலத்திலிருந்து ஒரணு வளர்ந்து விந்தணுவாகிறது.

spermatogenesis (spermatog) : விந்தணுவாக்கம், விந்தாக்கமுறை : ஆண் கருவுயிர்மத் தோற்றம்.

spermatogenous : விந்தாக்கம் சார்ந்த.

spermatologist : விந்தாக்க ஆய்வியலார்; விந்தாக்கவியலார்.

spermatology (spermology) : விந்தணுவியல், விந்தியல் : ஆண் கருவுயிர்மம் பற்றி ஆராயும் அறிவியல்.

spermatophore : விந்துறை : ஆண் கருவுயிர்மம் அடங்கிய சிதலுறை.