பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1018

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

spermatorrhoea

1017

sphincterolysis


spermatorrhoea : மேக நோய்; விந்து ஒழுக்கு : ஆண் கருமக் கசிவுக் கோளாறு.

spermatozoa : விந்தணு.

spermatozon : விந்து உயிரணு; வளர்ச்சியுற்ற விந்தணு; விந்து : இனப்பெருக்கத்திற்கு முதிர்ச்சியுடைய ஆண் கருவுயிர் உயிரணு.

sperm duct : விந்து நாளம்.

spermicidal cream : விந்தணு பசை.

spermicide : விந்து கொல்லி; விந்தணுக் கொல்லி மருந்து; விந்தணுக் கொல்லி : ஆண் விந்தணுவைக் கொல்லக்கூடிய ஒரு மருந்து.

spermicide cream : விந்தணு அழிப்புப்பசை.

spermoblast (spermatoblast) : விந்து மூலம் : ஆண் கருவுயிர்மக்கரு மூலம்.

spermology : விந்தாக்க் ஆய்வியல் : ஆண் கருவுயிர்ப்பைப் பற்றிய ஆய்வுத்துறை.

sphacelation : தசையழுகல் : தசையெலும்பு அழிந்து சிதைதல்.

sphenion : ஆப்புப்புள்ளி : மண்டையுச்சிப் பக்க எலும்பின் ஆப்பெலும்புக் கோணத்தில் ஒரு புள்ளி.

sphenoid : ஆப்பு அலும்பு : மண்டையோட்டு அடிப்புறக் கூட்டெலும்பு.

sphenoid bone : ஆப்பு அலும்பு.

sphenoidal sinus : ஆப்பெலும்புக் காற்றறை.

spherocyte : கோளச் சிவப்பணு; உருண்டை உயிரணு : கோளவடிவ இரத்தச் சிவப்பணு. இது இருபக்க உட்குழிவான சிவப்பணுக்களிலிருந்து மாறுபட்டது.

spherocytosis : கோணச் சிவப்பணு அழிவு : மரபுவழி வரும் ஒரு மரபணுக்கோளாறு. இது பிறவியிலேயே இருக்கலாம். ஆனால், இதன் அறிகுறிகள் ஆயுள் முழுவதும் வெளிப்படாமல் இருக்கலாம். சில சமயம், தற்செயலாக இரத்த சோதனை செய்யும்போது இது கண்டறியப்படுகிறது.

spheroid : கோளஉரு; கோளகம் : ஓரிட நரம்பணுவேரிழை, உரு வழிந்த நுண்ணுறுப்புகள் நிறைந்து விரிதல்.

sphincter muscle : சுருங்கு தசை; சுருக : புழைவாய்ச் கரிப்புத் தசை.

sphincterolysis : பட்டைப்பிரிப்பு : முன்திக ஒட்டு நிலையில், பளிங்குப் படலத்திலிருந்து விழிக்கரும் படலத்தை அறுவை செய்து பிரிக்கும் முறை.