பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1020

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sphygmus

1019

spindle


sphygmus : நாடி; நாடித்துடிப்பு.

spica : வரிக்கட்டு; பட்டைத் திசுப் பின்னல்; உறை : புண்பட்ட இடத்தின் மீது திருகு சுற்றாகவும் எதிராகவும் வரிந்து கட்டும் துணிக்கட்டு.

spicule : எலும்புமுன் சிலாம்பு : ஊசி முன் வடிவுடைய சிறிய எலும்பு.

spider naevi : சிலந்தியுரு நுண் நாளங்கள் : ஒரு நடு நுண்தமனியும் பிரியும் கிளைகளும் கொண்ட சிறு சிவப்புப் புள்ளிகள். கல்லீரல் செயலிழப்பு, கர்ப்பம், பட்டினி, வாய்வழி கருத்தடை மாத்திரை எடுக்கும் போதும் முகத்திலும் கையுறுப்புகளிலும் உடம்பின் மேல்பகுதியிலும் காணப்படும் அவற்றை அழுத்தினால் வெளிர்கின்றன.

spina bifida : நரம்புப் புழை அடைப்பின்மை; பிளந்த முள்; முதுகெலும்புப் பிளவு : நரம்புப் புழையில் குறிப்பாக இடுப்படி முக்கோண முட்டெலும்புப் பகுதியில் முழுமையாக அடைப்பு ஏற்படாமல் இருக்கும் பிறவிக் கோளாறு.

spinal : முதுகந்தண்டு சார்ந்த : முதுகந்தண்டு தொடர்புடைய, முதுகந்தண்டுப் பகுதியில் மட்டும் உணர்வை நீக்கக் கொடுக்கப்படும் மருந்து ஓர் உறுப்பெல்லை உணர்வு நீக்கக்கரைசல் மருந்தாகும்.

spinal canal : முதுகந்தண்டுப் புழை; தண்டு வடக்குழாய்.

spinal column : முதுகந்தண்டு.

spinal chord : தண்டுவடம் : முதுகந்தண்டுவடம்; தண்டக நாடி.

spinal fluid : தண்டுவட நீர்மம்.

spinalganglia : தண்டு வட முடிச்சுகள்.

spinal roots : தண்டுவட வேர்கள்.

spindle : ஒடுங்கியகம்பி : 1. நீண்டு ஒடுங்கிய அணு அல்லது அமைப்பு. 2. அணுப்பிளவின் போது, நிறக்கீற்றுகள் ஒழுங்கமைவுக்கும் இயக்கத்துக்கும் உதவும் நுண்குழல்கள் கொண்ட அமைப்பு.