பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1022

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

spiroscope

1021

spleen


spiroscope : மூச்சுளுவுமானி; நுரையீரல் காட்சிக் கருவி : நுரை யீரல்களைக் கண்ணால் பார்ப்பதற்கு உதவும் கருவி.

spit : துப்புகை; உமிழ்.

spittle : நுரையீரல்கபம்; உமிழ் சளி; கோழை : நுரையீரலிலிருந்து கிருமியாக வெளிக் கொணரப்படும் பொருள், உமிழ்நீரையும்(எச்சில்) குறிக்கும்.

Spitz Holter valve : ஸ்பிட்ஸ் ஹோல்ட்டர் தடுக்கிதழ் : நீர் கொண்ட கபாலத்திலிருந்து நீரை வெளியேற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் தனிவகை தடுக்கிதழ்.

splanchnic : குடல் சார்ந்த; உள்ளுறுப்பு சார்ந்த; வயிறு சார்ந்த : குடல் தொடர்புடைய.

splachnicectomy : குடல் நரம்பு அறுவை; உள்ளுறுப்பு எடுப்பு : குடல் நரம்புகளை அறுவை மருத்துவம் முலம் அகற்றுதல். இதனால் உள்ளுறுப்புகளுக்குப் பரிவுத் துண்டுதல்கள் கிடைப்பதில்லை. இது மிக இரத்த அழுத்தத்தின்போது அரிதாகச் செய்யப்படுகிறது.

splanchnography : உள்ளுறுப்பு விளக்கம் : உள்ளுறுப்புகளைப் பற்றிய உடற்கூறு விளக்கம்.

splanchnology : குடலியல்; உள்ளுறுப்பியல் : மூளை, குடற்கொடி, இதயம், நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகளின் கட்டமைப்பு, செயல்முறை பற்றி ஆராயும் அறிவியல்.

splanchnoskeleton : உள்ளுறுப்புக்கூடு : உள்ளுறுப்புகளுடன் தொடர்புடைய உடலமைப்பு.

splanchnotomy : குடல் அறுவை : குடல் போன்ற உள்ளுறுப்புகளில் அறுவை மருத்துவம் செய்தல்.

splashback : துருத்து திசு : துப்பாக்கிக் குண்டு நுழைந்த காயத்திலிருந்து துருத்தும் திசு.

spleen : மண்ணீரல் : இரைப்பைக்குப் பின்புறம், கணையத்