பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1024

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

splenotomy

1023

spondyl..


ரல் சிரையும் சிறுநீரகச் சிரை யும் பின்னிப் பிணைந்திருக்கும் நிலை.

splenotomy : மண்ணிரல் அறுவை : மண்ணீரலைத்துண்டித்து எடுத்தல், மண்ணிரல் உள்ளறுவை.

splicing : புரியிணைவு : டிஎன்ஏ ஆர்என்ஏ அல்லது புரதம் போன்ற நீண்ட மூலக்கூறின் புரிகள் வெட்டி மீண்டும் ஒன்றிணைதல்.

splint : முழந்தாளெலும்பு; சப்பை; சிம்பு.

splinter-bone : முழந்தாள் எலும்பு : மனிதரின் முழந்தாள் எலும்பு.

splinter haemorrhage : சிம்பு குருதியொழுக்கு : காயம், செதிள்நோய், குறைதிடீர் இதய உள்வரித்தொற்று, ஊசிப்புழு தொற்று மற்றும் மூட்டுவாத அழற்சியில் நகங்களுக்கடியில் சிறுகோட்டு இரத்த ஒழுக்கு.

splinting : சிம்புக்கட்டு : 1. சிம்பு வைத்தல், 2. சிம்புவைப் பயன் படுத்தி மருத்துவம், 3. இரண்டு மூன்று பற்களை சேர்த்து ஒரு உறுதியான அமைப்பை ஏற்படுத்த ஒரு நிலைத்த அமைப்பைப் பயன்படுத்தல், 4. ஒரு தசையின் இறுக்கம்.

splitting : பிரித்தல்; பிளத்தல் : 1. ஒரு பொருள் இரண்டு அல்லது அதிகப்பகுதிகளாகப் பிளத்தல். 2. மூலக்கூறைத் துண்டாக்கும் ஒரு கோவேலன்ட் பட்டையின் பிளவு. 3. ஒரு நன்கு தெரியப்பட்ட பாதிப்பை சிறு துணை வகைகளாகப் பிரித்தல்.

SPOD : ஊனமுற்றோர் உதவித் துறை : உடல் ஊன முற்றோருக்கு ஏற்படும் பாலுறவுச் சிக்கல்களில் உதவி புரியும் ஒரு துறை. இது ஊனமுற்றோர் மறு வாழ்வுச் சங்கத்தின் ஒர் அங்கம்.

spoke-bone : முன்கை எலும்பு.

spondyl (spondyle) : முதுகெலும்புக் கண்ணி : முதுகெலும்பின் தனிக்கண்ணி.