பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1029

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

standstill

1028

staphyloma


வும், பின்னர் கைகால் பகுதிகள் மரத்துப் போதலும், உடல் நடுக்கமும் ஏற்படும் ஒரு நோய். ஒட்டுயிர் நச்சுகளின் கலவையினால் இது உண்டாகிறது.

standstill : செயலிலா; இயக்கமிலா.

staoedectomy : அங்கவடி செவிச் சிற்றெலும்பு அறுவை : செவி நோய்களின்போது அங்கவடி செவிச்சிற்றெலும்புகளை அறுவை மருத்துவம் முலம் அகற்றுதல் உடலில் செயற்கை உறுப்பு இணைத்தல் மூலம் இந்தச் சிற்றெலும்புகளுக்குப் பதிலாக வேறு செயற்கை எலும்புகளைப் பொருத்தி இயல்பான கேட்புத் திறனை மீட்கலாம்.

stapedial mobilization stapedio lysis : அங்கவடி செவிச் சிற்றெலும்பு விடுவிப்பு : செவி நோய்களினால் செயலிழந்த அங்கவடி செவிச் சிற்றெலும்புகளை விடுவித்தல்.

stapedotomy : அங்கவடித் துளைப்பு : அங்கவடி எலும்பின் அடித்தட்டில் ஒரு சிறு துளை அறுவை மூலம் செய்தல்.

stapes : அங்கவடி செவிச் சிற்றெலும்பு : நடுக்காதிலுள்ள அங்கவடிவச் செவிசிற்றெலும்பு.

Staphylococus : வட்ட பாக்டீரியா : காயங்களிலும் கழலைகளிலும் நோய்த் தொற்று உண்டாக்கும் வட்டவடிவ பாக்டீரியாக்கு குழுமங்கள்.

staphyloderma : ஸ்டேபிலோகாக்கஸ் தோல் தொற்று : தோலின் ஸ்டேபிலோகாக்கல் கிருமித் தொற்று.

staphylolysin : ஸ்டேபிலோலைசின் : ஸ்டேஃபிலோகாக்கஸ் கிருமி உண்டாக்கும் குருதியழிவுப் பொருள்.

staphyloma : கருவிழிப் பிதுக்கம் : கண்ணின் வெண்விழிக் கோணத் தின் புறத்தோல் வெண்விழி பிதுங்கியிருத்தல்.