பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1032

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

stercobilinogen

1031

sterilization


நிறமி. இது பித்தநீர் நிறமி களிலிருந்து தோன்றுகிறது.

stercobilinogen : ஸ்டெர்க்கோபிலினோஜென் : மலத்தில் வெளிப் படும் பொருள். நுண்ணுயிரிக் குழுமத்தால் ஒன்றிணைந்த பிலிரூபினின் வளர்சிதை மாற்றத்தால் உண்டாகிறது.

stercoraceous (stercoral) : மலம் சார்ந்த : மலத்தைப் போன்ற.

stercoroma : மலக்கட்டி : இறுகிய மலம் பெருங்குடலில் நேர்க் குடலில் குவிந்து, வயிற்றுக் கட்டி போன்ற தோற்றம்.

stereoauscultation : திட்பக்கேட்பு : மார்பில் பல பகுதிகளில் வைத்து (ஸ்டெதாஸ் கோப்பின்) கேட்புக் கருவியின் இரு மார்புப் பகுதிகளைக் கொண்டு கேட்டல்.

stereoscope : திட்பக் காட்சிக் கருவி : ஒரு பொருளின் ஒன்று போன்ற இரு உருவங்களை இணைத்து. பொருட்களின் திடத்தின் மைய பரிமாணத்தை வெளிப்படுத்திக் காட்டும் ஒரு கருவி.

stereotactic : துல்லியமாய் இடமறியும் : 1. மூளைத் திசுவிழப்பு அறுவை தொடர்பான 2. வெளியில் துல்லியமான இடமறியும் தன்மையுடைய.

stereotactic surgery : மூளைத் திசுவிழப்பு அறுவை : வாதம், பன்முக அனும உள்ளரிக் காழ்ப்பு. காக்கை வலிப்பு போன்ற நோய்களில் திசுக்களைக் கண்காணிப்பதற்கு அல்லது அழிப்பதற்கு மூளையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மின் முனைகளையும், துளைக்கருவி கொண்ட குழாய் கருவிகளையும், செலுத்துதல், இதனால் வலியைக் குறைக்கலாம்.

sterets : ஸ்டெரட்ஸ் : நோய் நுண்ம ஆய்வெடுப்புக் கசிவு நீர்மத்தின் வணிகப் பெயர். இதில் 70% ஐசோப்புரோப்பில் ஆல்ககால் அடங்கியுள்ளது. ஊசிகுத்துவதற்கு முன்பு இதனைத் தோலில் தடவி காயவிடப்படுகிறது.

sterical : ஸ்டெரிக்கால் : மேற்பரப்பைச் சுத்தம் செய்வதற்கு மட்டும் பயன்படுத்தப்படும் கரையக் கூடிய கரியக்காடிக் கூட்டுப் பொருளின் வணிகப் பெயர்.

sterile : நுண்ணுயிரற்ற; மலடான : நோய் நுண்மங்கள் ஒழிக்கப் பட்ட இனப்பெருக்கத்திறனற்ற.

sterility : மலட்டுத் தன்மை; நுண்ணுயிரற்ற : இனப்பெருக்கத் திறன் இன்மை.

sterilization : நுண்ணுயிர் அகற்றல்; கிருமி நீக்கம்; கருத்தடை அறுவை; மலடாக்கல் : நோய்க்