பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1033

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sterilizer

1032

Sternutative...


கிருமிகளை அழித்தல், கருத்தரிப்பதைத் தடுப்பதற்கான அறுவை மருத்துவம்.

sterilizer : கிருமி அழிப்புக் கருவி; கிருமி நீக்கி; தூய்மையாக்கி : நோய் நுண்மங்களை ஒழிக்கும் பொருள்.

sterimalgia : மார்புவலி.

sternodymus : மார்பொட்டு : முன்மார்புச் சுவரில் ஒட்டியிணைந்துள்ள ஒட்டிய இரட்டையர்.

sternomastoid : மார்பெலும்பு கூம்பு முனைத் தசை.

sternoclavicular : மார்பு-கழுத்தெலும்பு சார்ந்த : மார்பெலும்பு, கழுத்துப்பட்டை எலும்பு தொடர்புடைய.

sterno cleidomastoid muscle : கழுத்து வார்த்தசை : மார்பெலும்பு கழுத்துப்பட்டை எலும்பு இவற்றிலிருந்து எழுந்து, பொட்டெலும்பின் கூம்பு முனைப்புக்குள் செருகிக்கொள்ளும் ஒரு வார் போன்ற கழுத்துத் தசை.

sterno costal : மார்பு-விலா எலும்பு சார்ந்த : மார்பெலும்பும், விலா எலும்புகளும் தொடர்புடைய.

sternopericardial : மார்பெலும்பு இதயஉறை : மார்பெலும்பு மற்றும் இதயச் சுற்றுறை தொடர்பான.

sternothyroid : மார்பு தைராயிடு பற்றிய : மார்பெலும்பு மற்றும் தைராயிடு குருத்தெலும்பு அல்லது சுரப்பி தொடர்பான.

sternotomy : மார்பெலும்பு அறுவை : மார்பெலும்பை அறுவை மருத்துவம் மூலம் பிளத்தல்.

sternum : மார்பெலும்பு மார்புநடு வெலும்பு : விலா எலும்புகளை இணைக்கும் மார்பு நடுவரை எலும்பு.

sternutation : தும்மல்.

sternutative (sternutatory) : தும்மல் பொருள் : தும்மல் தூண்டும் பொருள்.