பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1034

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

steroids

1033

stethoscope


steroids : இயக்க ஊக்குநீர்; இயற்கை இயக்குநீர்கள் : கொழுப்புப் பொருளுடன் (கொலஸ்டிரால்) தொடர்புடைய இயற்கையாக ஊறும் வேதியியல் பொருட்களின் தொகுதி. இதில் பாலுறவு இயக்குநீர்கள் (ஹார்மோன்), அண்ணீரகப் புற உறுப்பு இயக்குநீர்கள், பித்தநீர் அமிலங்கள் போன்றவை அடங்கும்.

'stertor : குறட்டை; ஓசை மூச்சு : உறங்கும்போது மூச்சு விடு கையில் குறட்டை விடுதல்.

stertorous : குறட்டைவிடும்.

stethoscope : மார்பளவி; இதய துடிப்புமானி; மார்பொலிமானி; நாடிக்குழல்; மார்பு ஆய்வி : இதயத் துடிப்பினை ஆராய்வதற்கான கருவி.

stethogonimeter : மார்பு வளைவு மானி :மார்புக்கூட்டின் வளைவினை அளக்கும் கருவி.

stethograph : மார்பொலி வரைவி; மார்பியக்க வரைவி.

stethometer : மார்பு விரிவுமானி : மார்புக் கூட்டின் சுற்றளவு அல்லது விரிவளவை அளக்கும் கருவி.

stethoscopic : இதயதுடிப்பு சார்ந்த.

stethoscopist : இதயதுடிப்பு ஆய்வர்.

stethopolyscope : பல்முனை மலிபொலிமானி.

sthenic : இதய இரத்தக் குழாய் மிகு துடிப்பு.

stibocaptate : ஸ்டிபோகாப்டேட் : குடலில் நத்தைக் கிருமி நோயைக் குணப்படுத்துவதற்குப் பயன்படும் மருந்து.

stibophen : ஸ்டிபோஃபென் : குடலில் நத்தைக் கிருமி நோயைக் குணப்படுத்துவற்கான கருமிளை (ஆன்டிமனி) கூட்டுப் பொருள்.

stethoscope : நாடிக்குழல்; இதயத்துடிப்பு மானி; மார்பு ஒலி.