பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1038

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

straight tubule

1037

sterptococcaemia


மேல் தூக்க முடியாததற்குக் காரணம் தண்டுவட நரம்பு வேர்கள் சிக்கிக்கொள்வதாகும்.

straight tubule : நேர் நுண்குழல் : விரைவில் வளைவிந்தணுக் குழலிருந்து விரைவலைச் செல்லும் ஒரு நாளம்.

strain : தசை நலிவு; திணறல்; மிகை முயற்சி : அளவுக்குமீறிய உடல் முயற்சி காரணமாகத் தசைகளில் ஏற்படும் நலிவு.

stramonium : ஊமத்தை : ஊமத்தைச் செடி, ஊமத்தை இலையிலிருந்து எடுக்கப்படும் கபநோய் மருந்து.

strangulate hernia : நெரிப்புப் பிதுக்கம் : பிதுக்கத்தில் ஏற்படும் நோய்.

strangulated : நெரிக்கப்பட்ட : மூச்சுக்குழாய் குறுக்கப் போதுமான காற்று செல்வதைத் தடுக்கும் நிலை அல்லது ஒரு பிதுக்கத்தில் சிரை வடிப்பை அடைக்கும் நிலை.

strangulation : நெரிப்புத் தடை முறுக்கம் : அழுத்தத்தின் மூலம் குருதியோட்டத்தைத் தடுத்தல்.

strangury : நீர்க்கடுப்பு; சொட்டுச் சிறுநீர் : சூடு பிடிப்பதனால் வலி யுடன் சிறிதுசிறிதாக சிறுநீர் கழியும்நோய்.

stratified : அடுக்கமைவு : பல அடுக்குகளாக அமைக்கப்பட்ட

stratum : படலம்; தோலடுக்கு : தோலின் புற அடல் படலம். எ-டு: சொரசொரப்புப் படுகை; வழவழப்புப் படுகை.

strawberry-mark : செம்மறு : மென் சிவப்பு நிறமான உடலின் நிலை மச்சம்.

strawberry tongue : செந்நாக்கு : நாக்கில் தசைப்பற்றுகள் செந்நிறச் சிறு முகிழ்கள் நீட்டிக் கொண்டிருத்தல். இந்தச் செம்படலம் நீங்கியதும் நாக்கு முற்றிய ஸ்டிராபரி என்ற சிவப்புப் பழம் போன்று சிவந்திருக்கும். இது செம்புள்ளி நச்சுக் காய்ச்சலின் அறிகுறி.

strephosymbolia : திருப்பிய தோற்றம் : கண்ணாடியில் தெரிவது போல் பொருட்கள் மறு தலையாகத் தோற்றம் தெரிவது.

Streptobacillus : சங்கிலி வரிசை கோல்வடிவக் கிருமி : ஸ்ட்ரெப் டோபேசில்லஸ் உருவை வெருவாக மாற்றக்கூடிய கிராம். சாயம் ஏற்காத நுண்ணுயிரி வகை.

Streptococcaceae : சங்கிலி வரிசை நுண்ணுயிரி : சங்கிலி வரிசையாக அல்லது இணையாகத் தோன்றும், கிராம் சாயம் ஏற்கும் கோளவடிவ நுண்ணுயிரிக் குடும்பம்.

streptococcaemia : சங்கிலிக் கிருமிக் குருதி : இரத்தத்தில் ஸ்ட்ரெப்டோகாக்கை இருப்பது.