பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1039

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

streptococcus

1038

stereognosis


streptococcus : சங்கிலிக்கிருமி : கிருமிப் பிளப்புக்குப் பின்னரும் ஒட்டிக்கொண்டிருக்கும் நோய்க் கிருமி வகை. இது கிராம் சாயம் எடுக்கும் தன்மையுடையது. இது பல்வேறு நீளமுடைய சங்கிலித் தொடர்களாக அமைந்து இருக்கும். இவற்றில் லியூக்கோசிடின் என்ற வகை இரத்தத்தில் உள்ள வெள்ளணுக்களைக் கொல்லும், ஹேமேலிசின் என்ற வகை சிவப்பணுக்களைக் கொல்லும்.

stretch receptors : நெகிழ்வுணர்விகள்.

street virus : தெரு வைரஸ் : இயல்பான அல்லது மரபணு முறையில் மாற்றமடையாத வடிவில் உள்ள வைரஸ்.

strength : வலிமை.

streptodornase : ஸ்ட்ரெப்டோடார்னேஸ் : சங்கிலி நுண்மநொதி ஏவகை ஸ்ட்ரெப்டோ காக்கஸ் உண்டாக்கும் டிஎன்ஏ பிளக்கும் நொதி.

streptokinase : சங்கிலிக்கிருமி நொதி : சில வகைக் குருதிச் சங்கிலிக் கிருமிகளின் வளர்ச்சியிலிருந்து கிடைக்கும் ஒரு செரிமானப் பொருள். தசைகளுக்கிடையிலான கசிவு ஊனிரை விரைவாக அகற்று வதற்குப் பயன்படுகிறது.

streptolysin : ஸ்ட்ரெப்டோலைசிஸ் : குருதியழிவு ஸ்ட்ரெப்டோகாக்கை உண்டாக்கும் ஹீமோலைசின்.

streptomyces : சங்கிலிப்பூஞ்சனம் : பல (நோய்) உயிரி எதிர்ப்பிகளுக்கு மூலமாக உள்ள ஆக்டினோமைசஸ் என்னும் வகை சார்ந்த மண்வார் நுண்ணுயிரி வகை.

streptomycin : ஸ்டிரெப்டோமைசின் : ஒரு வகை கிருமிகளிலிருந்து கிடைக்கும் கிருமி எதிர்ப்புப் பொருள். காச நோயைக் குணப்படுத்தப் பயன் படுகிறது.

stereognosis : திட்ப உணர்வு அறிவு : கண்கள் முடியநிலையில் கையில் வைக்கப்பட்ட பொதுவான பொருள்களின் அளவு, உருவம், எடை, வடிவம்.